Thursday, February 3, 2011

1231~1235 உறுப்புநலன் அழிதல் (காமத்துப்பால் -> கற்பியல்)

1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
         நறுமலர் நாணின கண்

நமது வறுமையைவொழிக்க பொருளீட்ட தொலைவாகச்சென்ற கணவனை எண்ணியெண்ணி அழகிழந்த என் கண்கள் நறுமனம் வீசும் மலர்களைக்கண்டு வெட்கப்பட்டன
------------------------------------
தெளிபொருள் விளக்கம்

சிறுமை - ஏழ்மை, வறுமை
நமக்கு ஒழிய - நமக்கு வறுமை ஒழிய
சேண் - தொலைவு
சென்றார் - தொலைவாக சென்றுவிட்ட தலைவரை
உள்ளி - எண்ணி
கண் - அழகு இழந்த கண்கள்
நறுமலர் - நறுமனம் வீசும் மலர்களைக்கண்டு
நாணின - வெட்கப்பட்டன
------------------------------------
உறுப்புநலன் அழிதல் - தன்னைப்பிரிந்துச்சென்ற கணவனையெண்ணி உடலின் உறுப்புகள் அழகையிழத்தல்

1031~1035 உழவு (பொருட்பால் -> ஒழிபியல்)

1032 உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா
        தெழுவாரை யெல்லாம் பொறுத்து
(உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை யெல்லாம் பொறுத்து)

உழவுத்தொழிற்செய்பவர் பிறத்தொழிற்செய்பவர்கள் அனைவரையும் தாங்குவதால் உலகிலுள்ள அனைவருக்கும் அச்சாணிபோன்றவர்
---------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உழுவார் - உழவர், உழவுத்தொழில் செய்பவர்
அஃது அற்றாது - உழவுத்தொழில் அல்லாது
எழுவாரை எல்லாம் - பிறத்தொழிலின் மீது செல்பவர்கள் அனைவரையும்
பொறுத்து - தாங்கி
உலகத்தார்க்கு - உலகிலுள்ள அனைவருக்கும்
ஆணி - அச்சாணி போல் விளங்குகிறார்