Thursday, February 25, 2010

286~290 கள்ளாமை (அறத்துப்பால் -> துறவறவியல்)

கள்ளாமை (அறத்துப்பால் -> துறவறவியல்)
286  அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
          கன்றிய காத லவர்

களவாடுவதில் விருப்பத்தை மிகுதிபடுத்திகொண்டவர் ஓர் எல்லைக்குட்பட்டு அதைக்கடைபிடித்து நடக்கமாட்டார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

களவின்கண் - களவினிடத்தே
கன்றிய - முதிர்ந்த மிகுந்த
காதலவர் - விருப்பங்கொண்டவர்
அளவின்கண் - எல்லைக்குட்பட்டு
நின்றொழுகல் + ஆற்றார் - கடைபிடித்து நடக்கமாட்டார்

Wednesday, February 24, 2010

810-1 தீநட்பு

தீநட்பு (பொருட்பால் -> அங்கவியல்)
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையா
ரேதின்மை கோடி யுறும் - 816
அறிவில்லாதவனிடம் நெருங்கியநட்புகொண்டிருப்பதைவிட அறிவுடைவரின் நட்புகொள்ளாதிருப்பது கோடிபெரும்

--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
பேதை - அறிவில்லாதவனின்
பெருங்கெழீ + நட்பின் - மிகநெருங்கிய நட்பினைவிட
அறிவுடையார் - அறிவுடைவரின்
ஏதின்மை - ஏது + இன்மை - நட்பின்மை பகைமை
கோடியுறும் - கோடிதரும்
--------------------------------------------------------------------------------
ஏதுவாக - பயனுடையதாக நாம் நடைமுறையில் பயன்படுத்தும் சொல்
ஏதின்மை - பயன்பெறாதது
அறிவுடைவரின் ஏதின்மை - அறிவுடைவரின் பயனைப்பெறாதது

Tuesday, February 23, 2010

701~705 குறிப்பறிதல் (பொருட்பால் > அமைச்சியல்)

701  கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
            மாறாநீர் வையக் கணி

சொல்லத்தகாததை கண்களாற்கண்டே குறிப்பறிகிறவன் வையகத்துக்கு அணிகலன்போன்றவன்

--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கூறாமை - சொல்லத்தகாததை சொல்லாததை
நோக்கி - கண்களாற்கண்டே
குறிப்பறிவான் - குறிப்பால் உணருகிறவன்
மாறாநீர் - வற்றாத நீரடங்கிய
வையக்கு + அணி - வையகத்துக்கு அணிகலன்போன்றவன்
--------------------------------------------------------------------------------
மாறாநீர் - என்றும் மாறாத - திருவள்ளுவருக்கு Global warming பற்றி அன்று யாரேனும் எடுத்துரைக்கவில்லை
--------------------------------------------------------------------------------
703  குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
           யாது கொடுத்துங் கொளல்

தாஞ்செய்யும் குறிப்பிற்கு பிறர்கேற்படும் மாற்றங்களைவைத்தே அவர்எண்ணத்தை அறிந்துகொள்பவரை எதைக்கொடுத்தும் தன் அவையில் உறுப்பினராக வைத்துக்கொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குறிப்பின் - தான்செய்யும் குறிப்பிற்கு
குறிப்பு (+ உணர்வாரை) - பிறர்கேற்படும் மாற்றங்களைவைத்தே
(குறிப்பு) உணர்வாரை - அவர்மனதை அறிந்துகொள்பவரை
யாதுகொடுத்தும் - எதைக்கொடுத்தும்
உறுப்பினுள் - தன் அவையில் உறுப்பினராக
கொளல் - வைத்துக்கொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
அமைச்சியலின் கீழ் வந்துள்ளது. அமைச்சரை மன்னன் தேர்ந்தெடுப்பதாக வந்துள்ளது

Monday, February 22, 2010

225~230-1 ஈகை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

228  ஈ.த்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
          வைத்திழக்கும் வன்க ணவர்

வறியவருக்கு எதுவுமளித்திடாமல் தம்முடைமைகளை தாமேவைத்து இழக்கும் ஈவிரக்கமற்றோர் பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ

--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஈ.த்து + உவக்கும் + இன்பம் - ஈகைசெய்து அதுகொடுக்கும்
அறியார்கொல் - அறியமாட்டாரோ
தாமுடைமை - தம்முடைமைகளை
வைத்து + இழக்கும் - தாமேவைத்து இழக்கும்
வன்கணவர் - வன்மையானவர்

--------------------------------------------------------------------------------
ஈவிரக்கம் - ஈவு + இரக்கம் - ஈகைசெய்யும் இரக்ககுணம்..???

--------------------------------------------------------------------------------
230  சாதலி னின்னாத தில்லை இனிததூஉம்
          ஈ.த லியையாக் கடை

சாவைவிட துன்பந்தரக்கூடியது வேறெதுவுமில்லை ஆனால் வறியவருக்கு ஒன்று கொடுக்க இயலாதநிலைமையில் அந்த சாவும் இனியதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

சாதலின் - சாவைவிட
இன்னாது - துன்பந்தரக்கூடியது கொடியது
இல்லை - வேறெதுவும் இல்லை
இனிது அதுவும் - அந்த சாவும் இனியதே
ஈ.தல் - வறியவருக்கு கொடுத்தல்
இயையாக்கடை - இயலாத நிலை
--------------------------------------------------------------------------------
கடை > கடமை > வழிமுறை
இயலாக் கடை - தன் வாழ்வின் வழி அவ்வாறாக ஆகிவிட்ட நிலை
--------------------------------------------------------------------------------

Sunday, February 21, 2010

421~425 அறிவுடைமை (பொருட்பால் -> அரசியல்)

424  எண்பொருளவாகச் செலச்சொல்லி தான் பிறர்வாய்
          நுண்பொருள் காண்ப தறிவு
நாம் சொல்வதை எளியமுறையில் கேட்போரின் மனதிற்சென்றடையும்வாறு சொல்வதும் பிறர்சொல்லில் நுட்பமானத்தையுங்கண்டறிவதும் அறிவுடைமையாகும்

தெளிபொருள் விளக்கம்
எண்பொருள் + ஆக - எளிதாக பொருள்புரியும்படி
செலச்சொல்லி - கேட்போரின் மனதிற்சென்றடையும்வாறு சொல்லி
பிறர்வாய்+ நுண்பொருள் - பிறர் கூறும் சொல்லில் நுட்பமானத்தையும்
காண்பது + அறிவு

செலச்சொல்லி - நடைமுறையில் - உன்பேச்சி அங்கே செல்லாது

Thursday, February 18, 2010

891-895 பெரியாரைப்பிழையாமை (பொருட்பால் -> அங்கவியல்)

891  ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
          போற்றலு ளெல்லாந் தலை

ஒருசெயலை செய்துமுடிக்கும் வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல் தம்மைக்காத்திடும் காவல்களனைத்தையும்விட சிறந்தகாவலாக அமையும்
------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
ஆற்றுவார் - செய்துமுடிக்கும் வல்லவரின்
ஆற்றல் - செயலை வலிமையை
இகழாமை - இகழாதிருந்தால்
போற்றுவார் - காத்துக்கொள்பவர் தனக்குத்தீங்குவராமல்
போற்றலுள் எல்லாம் - அனைத்து காவல்களிலும்
தலை - சிறந்தது

 ------------------------------------------------------------------------------

894  கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
          காற்றாதா ரின்னா செயல்

ஆற்றற்படைதவர்க்கு அவ்வாற்றலில்லதார் துன்பவிளைவித்தல் மரணத்தை கைதட்டியழைப்பதைப்போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
கூற்றத்தை - மரணத்தை
கையால் - கைதட்டி கைகாட்டி
விளித்தல் +அற்றால் - அழைப்பதைப்போன்றது
ஆற்றுவார்க்கு - ஆற்றற்படைதவர்க்கு
ஆற்றாதார் - அவ்வாற்றலில்லதார்  
இன்னாசெயல் - துன்பவிளைவித்தல்
------------------------------------------------------------------------------
தட்டி + அழைப்பது =தட்டியழைப்பது
அடி + ஆள் = அடியாள்
கை + தட்டி = கையைத்தட்டி / கைதட்டி
 ------------------------------------------------------------------------------

831~835 பேதைமை (பொருட்பால் -> அங்கவியல்)

832  பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
          கையல்ல தன்கட் செயல்

தனதல்லததை தன்னால் இயலாததை விரும்புவது பேதைமைகளிலெல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பேதைமையுள் + எல்லாம் பேதைமை - பேதைமைகளிலெல்லாம் மிகப்பெரிய பேதைமை
கை+ அல்ல +தன்+கண்  - தனதல்லததின்மீது தன்னால் இயலாததின்மீது
காதன்மை செயல்            - விரும்புவது காதல் தன்மைகொள்வது
அதன்கண் - அதன்மீது

பேதைமை (பொருட்பால் -> அங்கவியல்)
--------------------------------------------------------------------------------
834  ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
          பேதையிற் பேதையா ரில்

நூற்களை கற்றுணர்ந்தும் அதை பிறர்க்கெடுத்துரைத்தும் தான் அதன்படிநடக்காத அறிவற்றவனைவிட அறிவற்றவன் யாருமில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஓதி + உணர்ந்தும் - நூற்களை கற்றுணர்ந்தும்
பிறர்க்கு + உரைத்தும் - அதை பிறர்க்கெடுத்துரைத்தும்
தான் + அடங்கா - தான் அதன்படிநடக்காத
பேதையின் - அறிவற்றவனைவிட
பேதை யார் இல் - அறிவற்றவன் யாருமில்லை
--------------------------------------------------------------------------------
(தான் +) அடங்கா - அடங்கிப்போகுதல் என்று பொருளாகாது
தான்படித்த வரைமுறைக்குள் அடங்கிநடத்தல் படித்ததை பின்பற்றுதல் என்று பொருள்
--------------------------------------------------------------------------------

Thursday, February 11, 2010

1120-1 காதற்சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தல் (காமத்துப்பால் -> களவியல்)
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் - 1125

ஒளிகொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் அழகைநினைப்பதேயில்லை காரணம் அவற்றை மறந்தாலல்லவா நினைப்பதற்கு

தெளிபொருள் விளக்கம்
உள்ளுவன் - எண்ணுவேன் நினைப்பேன்
யான் - நான் (மன்யான் - மனதில் நான் ??)
மறப்பின் - மறந்தால்
மறப்பறியேன் - மறுப்பு + அறியேன் மறப்பதென்பதையறியேன்
ஒள்ளமர்க்கண்ணாள் - ஒளி அமர்திருக்கும் கண்ணையுடையவள்
குணம் - அவளின்னழகு அவளின்பண்பு
மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீதானே நீதானே- கரகாட்டகாரன்
Happy Valentines Day...!!

781-785 நட்பு (பொருட்பால் -> அங்கவியல்)

781  செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
          வினைக்கரிய யாவுள காப்பு

நட்புகொள்வதைவிட அரியசெயல் வேறெதுவுமில்லை நாம்செய்யும் செயற்களுக்கு நட்பைப்போல் சிறந்தபாதுகாப்பும் வேறெதுவுமில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

செயற்கு + அரிய - செய்வதற்கு அரியசெயல்
நட்பு + இன் - நட்புகொள்வதைவிட
யாவுள - எதுவுள்ளது
வினைக்கு (+ அரிய) - நாம்செய்யும் செயற்களுக்கு
அதுபோல் - நட்பைப்போல்
அரிய - சிறந்த
காப்பு - பாதுகாப்பு
யாவுள - எதுவுள்ளது
--------------------------------------------------------------------------------
அரிய - கஷ்டமான, சிறந்த, எளிதிற்கிட்டாத, விளைமதிப்பிடமுடியாத
கடினம் - கஷ்டத்தின் தமிழாக்கம்
--------------------------------------------------------------------------------
வினைக்கு காப்பது - பகைவர் நம்மீது செய்யும் செயலுக்கு பாதுகாப்பு என்றும் சிலவிளக்கவுரைகள் கூறுகின்றன
--------------------------------------------------------------------------------

783  நவிறொறும் நூனயம் போலும் பயிறொறும்
          பண்புடை யாளர் தொடர்பு

படிக்கும்பொழுது இன்பந்தரும் நூலினழகைப்போல் பண்புடையவர்களின்னட்பு பழகும்பொழுது இன்பந்தரக்கூடியது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நவிறொறும் - நவில் + தொறும் - நவில் தோறும் - படிக்கும்பொழுது
நூனயம் - நூல் + நயம் - நூலின்+ நயம் - நூலினழகு - நூலிட்பொருட்சிறப்பு
போலும் - போன்றதாகும்
பயிறொறும் - பயில்+தொறும் - பயில் தோறும் - பழகும்பொழுது
பண்புடையாளர் - பண்புடையவர்
தொடர்பு - நட்பு
தோறும் - நாள்தோறும் - நாட்பொழுது முழுவதும்
பயில் - பழகு - பழக்கம் - பறிச்சி
அனுபவம் என்பது வடமொழிசார்ந்தச்சொல் அதற்க்கினையான தமிழ்ச்சொலை தேடிவருகிறேன்
In English - Practise.
My English teacher told me
'Practise' as "He is Practising Medical" and
'Practice' as "Sachin is doing net practice".
Practise - Regular activity, Practice - Training
Do you agree with this? I am not getting any supporting material for this.

--------------------------------------------------------------------------------

Tuesday, February 9, 2010

541~545 செங்கோன்மை (பொருட்பால் -> அரசியல்)

542  வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன்

          கோனோக்கி வாழுங் குடி

மழையைநம்பி உலகிலுள்ள உயிர்களெல்லாம் வாழ்வதைப்போல் மன்னனின் செம்மையானயாட்சியைநம்பி அதன் குடிமக்கள் வாழ்வார்கள்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வான் + நோக்கி - மழையைநம்பி
வாழும் + உலகெல்லாம் - உலகிலுள்ள உயிர்கள்லெல்லாம் வாழ்வதைப்போல்
மன்னவன் - மன்னனின்
கோல் + நோக்கி - செம்மையானயாட்சியைப்பற்றி
வாழும் + குடி - அதை பெறுகிறவன் பெற்றபெறு
செங்கோன்மை - செம்மையான + கோல் + ஆன்மை
--------------------------------------------------------------------------------

543  அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
           நின்றது மன்னவன் கோல்

ஓர் அரசின் செங்கோன்மைதான் அந்தணர்நூற்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாகவிளங்குவது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அந்தணர்நூற்கும் - அந்தணரின்நூற்கும்
அறத்திற்கும் - அறவழிச்செயல்களுக்கும்
ஆதியாய் - முதன்மையாய்
நின்றது - விளங்குவது
மன்னவன்கோல் - மன்னவனின் சிறந்தயாட்சியே (ஆட்சி)
--------------------------------------------------------------------------------
திருவள்ளுவர் ஒன்றிக்கும்மேற்பட்டயிடங்களில் அந்தணன் என்றச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் குறள் எண் 8யில் அந்தணன் காலடி சேரவேண்டும் என்றுள்ளது
அந்தணன் - கடவுள் சான்றோர் கற்றறிந்தோர்?

Monday, February 8, 2010

புலான்மறுத்தல்

புலான்மறுத்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி

யாங்கில்லை ஊன்றின் பவர்க்கு - 252
பொருளை போற்றிக்காத்திடாதவர்க்கு பொருளின் சிறப்பு கிட்டாது அதுபோல் புலால்வுண்பவர்க்கும் அருளின் சிறப்பு கிட்டாது

தெளிபொருள் விளக்கம்பொருள் + ஆட்சி - பொருளின் பயன் சிறப்பு என்று பொருட்படுகிறது
போற்றாதார்க்கு - போற்றிக்காத்திடாதவர்க்கு
அருளாட்சி - அருளின் பயன் சிறப்பு என்று பொருட்படுகிறது
ஆங்கு இல்லை - அதுபோல் இல்லை
ஊன் + தின்பவர்க்கு - புலால் தின்பவர்க்கு (புலாற்றின்பவர்க்கு)
ஊன் - உடல்
புலாலைத்தின்பவர்க்கு --> புலால்+தின்பவர்க்கு --> புலாற்றின்பவர்க்கு

Thursday, February 4, 2010

860-1 பகைமாட்சி

பகைமாட்சி (பொருட்பால் -> அங்கவியல்)
கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து

மாணாத செய்வான் பகை - 867
தன்னோடிருந்துகொண்டே தனக்கு பொருந்தாதகாரியங்களை செய்துகொண்டிருப்பவனை பொருள்கொடுத்தாவது பகைவனாக்கிக்கொள்ளவேண்டும்

தெளிபொருள் விளக்கம்
கொடுத்தும் - பொருள்கொடுத்தும்

கொளல்வேண்டும் - பெற்றுக்கொள்ளவேண்டும்
மன்ற - தெளிவாக உறுதியாக நிச்சயமாக
அடுத்திருந்து - தனக்கு அருகிலிருந்து
மாணாத - பொருந்தாத ஏற்க்கதகாத
செய்வான் - செயளைச்செய்பவனின்
பகை - பகையை

மாணா - ஹிந்தியில் இன்றும் மாணா என்றால் எற்றுகொல்லுதல் என்றே பொருள் - வடமொழி?
பகைமாட்சி - பகைமையின் பெருமைகுறிக்கும்

Tuesday, February 2, 2010

756~760 பொருள்செயல்வகை (பொருட்பால் -> அங்கவியல்)

758  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
          றுண்டாகச் செய்வான் வினை

தனது பொருளைக்கொண்டு ஒன்றை உண்டாக்கச்செய்பவனின் செயல் குன்றின்மீதேறி யானை போரிடுவதைப்பார்பதுபோல் பாதுகாப்பானது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குன்று + ஏறி - குன்றின்மீதேறி
யானைப்போர் - யானை போரிடுவதை
கண்டு + அற்றால் - பார்பதுபோல்
தன்கைத்து - தனது பொருளைக்கொண்டு
ஒன்று உண்டாக - ஒன்றை உண்டாக்க
செய்வான் வினை - அவ்வாறு செய்பவனின் செயல்
--------------------------------------------------------------------------------

759  செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
          எஃதனிற் கூரிய தில்

பகைவரின் செருக்கையழிக்கும் தகுதியானகருவி பொருளைத்தவிர வேறொன்றுமில்லை ஆக அத்தகையபொருளை செய்க
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

செறுநர் - பகைவர்
செருக்கு + அறுக்கும் - இறுமாப்பு + அழிக்கும் (அகங்காரம் - வடமொழி)
எஃகு + அதனின்- ஆயுதம் அதனின்
கூரியது + இல் - கூரியதில்லை
செய்க பொருளை - (அத்தகைய) பொருளை செய்க

Monday, February 1, 2010

500-1 தெரிந்துதெளிதல்

தெரிந்துதெளிதல் (பொருட்பால் -> அரசியல்)
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள் - 509
நன்காராயாமல் யாரையும் நம்பக்கூடாது ஆராய்ந்து தேர்ந்தெடுத்தபின் நம்பிக்கையூட்டியப்பொருளை நம்பவேண்டும்

தெளிபொருள் விளக்கம்
யாரையும் -
தேறற்க - நம்பாதே நம்பிக்கைவைக்காதே
தேராது - ஆராய்ந்து தேராமல்
தேறும்பொருள் - நம்பிக்கையூட்டும் பொருளை
தேர்ந்தபின் - தேர்ந்தெடுத்தபின்
தேறுக - நம்புக
தெரிந்துதெளிதல் - தெளிவுருதல் - தேறுதல்- நம்புதல்