Thursday, February 3, 2011

1231~1235 உறுப்புநலன் அழிதல் (காமத்துப்பால் -> கற்பியல்)

1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
         நறுமலர் நாணின கண்

நமது வறுமையைவொழிக்க பொருளீட்ட தொலைவாகச்சென்ற கணவனை எண்ணியெண்ணி அழகிழந்த என் கண்கள் நறுமனம் வீசும் மலர்களைக்கண்டு வெட்கப்பட்டன
------------------------------------
தெளிபொருள் விளக்கம்

சிறுமை - ஏழ்மை, வறுமை
நமக்கு ஒழிய - நமக்கு வறுமை ஒழிய
சேண் - தொலைவு
சென்றார் - தொலைவாக சென்றுவிட்ட தலைவரை
உள்ளி - எண்ணி
கண் - அழகு இழந்த கண்கள்
நறுமலர் - நறுமனம் வீசும் மலர்களைக்கண்டு
நாணின - வெட்கப்பட்டன
------------------------------------
உறுப்புநலன் அழிதல் - தன்னைப்பிரிந்துச்சென்ற கணவனையெண்ணி உடலின் உறுப்புகள் அழகையிழத்தல்

1031~1035 உழவு (பொருட்பால் -> ஒழிபியல்)

1032 உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா
        தெழுவாரை யெல்லாம் பொறுத்து
(உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை யெல்லாம் பொறுத்து)

உழவுத்தொழிற்செய்பவர் பிறத்தொழிற்செய்பவர்கள் அனைவரையும் தாங்குவதால் உலகிலுள்ள அனைவருக்கும் அச்சாணிபோன்றவர்
---------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உழுவார் - உழவர், உழவுத்தொழில் செய்பவர்
அஃது அற்றாது - உழவுத்தொழில் அல்லாது
எழுவாரை எல்லாம் - பிறத்தொழிலின் மீது செல்பவர்கள் அனைவரையும்
பொறுத்து - தாங்கி
உலகத்தார்க்கு - உலகிலுள்ள அனைவருக்கும்
ஆணி - அச்சாணி போல் விளங்குகிறார்

Wednesday, August 11, 2010

105~110 செய்ந்நன்றியறிதல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

106  மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
          துன்பத்துட் டுப்பாயார் நட்பு

குற்றமில்லாதவரின் நட்பை மறந்திடாமல் இருக்கவேண்டும். நமது துன்பநேரத்தில் உதவியாய் இருந்தவரின் நட்பை விட்டுவிடாமல் இருக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

மாசற்றார் - குறையற்றவர் மாசற்றவர் குற்றமில்லாதவரின்
கேண்மை - நட்பை தொடர்பை பழக்கத்தை
மறவற்க - மறவாமல் இரு(க்க)
துன்பத்துள் - நமது துன்பநேரத்தில்
துப்பாயார் - உதவியாய் இருந்தவரின்
நட்பு - நட்பை
துறவற்க - விட்டுவிடாதே மறந்துவிடாதே
--------------------------------------------------------------------------------
துப்பு - பயன் உதவி
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி ...இக்குறளில் வரும் 'துப்பு'க்கும் இதேப்பொருள்தான்

--------------------------------------------------------------------------------
'மறவற்க' 'துறவற்க'
'செய்' என்பது கட்டளைச்சொல்லாக வரும் 'செய்யவேண்டும்' என்பது அறிவுரைப்போல் வரும் 'செய்க' 'நிற்க' 'ஓடுக' இவைப்போன்ற சொல்வகை கட்டளைக்கும் வேண்டுகோளுக்கும் நடுவே அமைந்துள்ளது தமிழின் ஒருவகை சிறப்பு
--------------------------------------------------------------------------------
107  எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
          விழுமந் துடைத்தவர் நட்பு

தம் துன்பத்தைத்துடைத்தவர் நட்பை எழுமையினையுடைய ஏழுப்பிறப்பும் எண்ணியிருப்பர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உள்ளுவர் - நினைத்திருப்பர் எண்ணியிருப்பர்
தங்கண் - தம்மிடத்து
விழுமம் - துன்பம்
எழுபிறப்பும் - ஏழுபிறப்பும்
எழுமை - எழுச்சியினையுடைய (பெருமை கூர்மை 'மை' - குணத்தைக்குறிக்ககூடியது )
--------------------------------------------------------------------------------
109  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
          வொன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக்கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால் அந்த ஒருவர் முன்னர் நமக்குச்செய்த நன்மையை மட்டும் நினைத்துப்பார்த்தாலே போதுமானது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கொன்றன்ன - கொன்று+அன்ன - கொல்வதைப்போன்ற (அன்ன - போன்ற)
இன்னாசெயினும் - தீமைசெயினும்
(அவர்செய்தவொன்று) நன்றுள்ள - நன்று+உள்ள
(செய்த+ஒரு) நன்றியினை எண்ணிப்பார்த்தால் கெடும்
--------------------------------------------------------------------------------

Thursday, July 15, 2010

571~575 கண்ணோட்டம் (பொருட்பால் - அரசியல்)

572  கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
          உண்மை நிலக்குப் பொறை

பிறரிடம் இரக்கங்காட்டும் பண்பில் தான் இவ்வுலகின் வாழ்வியல் அமைந்துள்ளது அந்தப்பண்பு இல்லாதவர் யாரேனும் இருந்தால் அவர் இந்தநிலத்துக்கு பயனில்லாதசுமையே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உலகியல் - உலகநடையானது, உலகின்முறை
கண்ணோட்டத்து - இரக்கங்காட்டும் பண்பில் தான்
உள்ளது - உள்ளது
அஃதிலார் - அந்தப்பண்பு இல்லாதவர்
உண்மை - (உண்மையில் யாரேனும்) இருந்தால்
நிலக்கு - இந்தநிலத்துக்கு
பொறை -பயனில்லாதசுமை
--------------------------------------------------------------------------------
உலகியல், உலகு+இயல், அறிவியல், புவியியல், வணிகவியல்
இயல்- பண்பு, நடை, இலக்கணம், முறை, வழி
--------------------------------------------------------------------------------
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்      - 573

பாடலோடு பொருந்தாவிட்டால் இசை என்னபயனுடையதாகும் அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்னபயனுடையதாகும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பண் - இசை
என் ஆம் - என்னபயனுடையதாம் எதற்காகும்
பாடற்கு - பாடலுக்கு
இயைபு இன்றேல் - பொருந்துதல் இல்லையானால் பொருந்தாவிட்டால்
கண்ணென்னாம் - கண் என்னபயனுடையதாம்
கண்ணோட்டம் இல்லாவிட்டால்
--------------------------------------------------------------------------------
பண் - இசை
நீண்டநாள்கேள்விக்கு இன்று பதில் கிடைத்ததென்று எண்ணுகிறேன்.
- 'ராகம்' என்பது வடமொழி அதற்க்கினையான தமிழ்ச்சொல் பண் என
கருதுகிறேன்.
- பண் - hexachord, in ancient Dravidian music; ஆறு சுரமுள்ள இசை. (unlike 7 notes of
the present day music, பண் had 5~6 notes)
- கோவிலில் பாடுபவர் 'பண்டாரம்' என்றழைக்கப்பட்டுள்ளார்
- வள்ளி பாடியது குறிஞ்சிப்பண்
What Is Pann?
Pann is a South Indian system of music that dates back to 400 bce. It utilizes a melodic structure that was developed by the Tamil people exclusively for performing devotional songs and preceded the development of the raga system of Carnatic music now famous in Tamil Nadu. The tones of Pann consist of what has come to be known in modern times as the pentatonic scale, which consists of five rather than seven notes per octave. This scale corresponds to the modern-day, Western major scale of seven notes, with the fourth and seventh omitted. Today, the pentatonic scale is commonly used in the Indonesian gamelan, the melodies of African-American spirituals and Celtic folk music. It has also been used by French composer Claude Debussy, as well as other Western classical composers, like Maurice Ravel and Frederic Chopin. Because of their simplicity, pentatonic scales are often used to introduce music to children.

Sunday, July 11, 2010

1155~1160 பிரிவாற்றாமை (காமத்துப்பால் -> கற்பியல்)

1160 அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
            பின்னிருந்து வாழ்வார் பலர்

நீ பிரிந்துச்செல்ல விடைக்கொடுக்கமுடியாமல் விடைக்கொடுத்து துன்பத்தைநீக்கி பிரிவைப்பொறுத்துக்கொண்டு அதன்பின்னும் உயிர்வாழும்பெண்கள் பலருண்டு
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அரிது ஆற்றி - செய்யாமுடியாததைச்செய்து (நீ பிரிந்துச்செல்ல விடைக்கொடுத்து)
அல்லல்நோய்நீக்கி - துன்பத்தைநீக்கி
பிரிவு ஆற்றி - பிரிவைப்பொறுத்துக்கொண்டு
பின் இருந்து - அதன்பின்னும் உயிருடனிருந்து
வாழ்வார் பலர் - உயிர்வாழும்பெண்கள் பலருண்டு
--------------------------------------------------------------------------------
ஆற்றி, ஆற்றுதல் - செய்தல், கடைப்பிடித்தால்
அரிது ஆற்றி
அரிது - முடியாதவொன்று
'கஷ்டப்பட்டு' என்னும் வடமொழிச்சொல்லுக்கு அழகான தமிழ்ச்சொல் கூறியுள்ளார்
கடினம் என்பதும் கஷ்டத்தின் தமிழாக்கமே

அல்லல்நோய் - சென்னைத்தமிழ் 'அல்லோல் படுறேன்'

Thursday, July 8, 2010

386~390 இறைமாட்சி (பொருட்பால் --> அரசியல்)

இறை - மன்னன், தலைவன்
மாட்சி - சிறப்பு, மகிமை

386 காட்சி கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
         மீக்கூறும் மன்ன னிலம்

காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் கூறாதபண்பாடும் உடைய மன்னனை உலகம் புகழும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

காட்சிக்கு + எளியன் - காட்சிக்கெளியவன்
கடும் + சொல்லன் - கடுஞ்சொல்லன்
அல்லனேல் - அல்லாதவனாகயிருந்தால்
கடுமையானசொர்க்களைச்சொல்லாதவனாகயிருந்தால்
மீக்கூறும் - உயர்த்திக்கூரும் புகழும்
மன்னன் + நிலம்
 --------------------------------------------------------------------------------
389  செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
          கவிகைக்கீழ்த் தங்கு முலகு

எடுத்துரைபவரின் சொல் செவியை அம்புபோல் துளைத்தாலும் அதை பொறுத்துக்கொண்டுக்கேட்கும் நற்பண்பையுடைய மன்னனின் ஆட்சியிங்கீழ் மக்கள் தங்குவார்கள்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கைத்தல் - அம்புபோல் பாய்தல்
செவிகைப்ப - செவியை அன்புபோல் துளைக்கும்
சொற்பொறுக்கும் - எடுத்துரைபவரின் சொல்லை பொறுத்துக்கொள்ளும்
பண்புடை - நற்பண்பையுடைய
வேந்தன் - மன்னனின்
கவிகைக்கீழ் - குடைக்குக்கீழ்
தங்கும் உலகு - மக்கள் தங்குவார்கள்
--------------------------------------------------------------------------------
அம்புபோல் துளைத்தாலும் - அம்புபோற்றுளைத்தாலும்
--------------------------------------------------------------------------------

Monday, July 5, 2010

பழைமை (பொருட்பால் -> அங்கவியல்)

802  நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
          குப்பாதல் சான்றோர் கடன்

பழமையானநட்பின் அடையாளம் நண்பர் நம்மீது வைத்திருக்கும் உரிமை. அந்த உரிமையைப்பாராட்டி இனிமையாக ஏற்றுக்கொள்வது பெரியோர்செயல்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நட்பிற்கு - பழமையானநட்பிற்கு
உறுப்பு - உடம்போடு சேர்ந்திருக்கும் உறுப்பைப்போல் நட்போடு சேர்ந்திருப்பது
கெழுதகைமை - நண்பர் நம்மீது வைத்திருக்கும் உரிமை
மற்றதற்கு - அதற்கு (அந்த உரிமை)
உப்பு ஆதல் - இனியவர் ஆதல்
சான்றோர் கடன் - சான்றோரின் கடமை
--------------------------------------------------------------------------------
'அதற்கு' என்பதற்கு 'மற்றதற்கு' என்று வள்ளுவர் சிலயிடங்களில் குறிப்பிட்டுள்ளார்
உப்பு - இனிமை அல்லது ஒத்துப்போதல் என்பதும் பொருந்தும்
உறுப்பு - சேர்ந்திருப்பது உறுப்பினர்
--------------------------------------------------------------------------------
802  பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
          செய்தாங்கு அமையாக் கடை

பழகியநண்பர்கள் உரிமையோடுசெய்த காரியங்களை தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால் அதுவரை பழகியநட்பு பயனற்றுப்போகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எவன் செய்யுங் - செய்யும்
கெழுதகைமை - உரிமையினால் செய்தவற்றிற்கு
செய்தாங்கு - செய்த ஆங்கு (அங்கனம்) - செய்தவாறு
கடை - கடமை, பொறுப்பு
அமையாக்கடை - உடன்படாராயின், பொறுப்பேற்க்காவிட்டால்

Monday, June 28, 2010

441~445 பெரியாரைத்துணைக்கோடல் (பொருட்பால் - அரசியல்)

442  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
          பெற்றியார்ப் பேணிக் கொளல்

தனக்கேற்பட்ட துன்பங்களை நீக்கி மேலுந்துன்பம்வராமல் முன்னறிந்துகாக்கும் தன்மையுடையவரை பேணித்துனையாககொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உற்றநோய் - அடைந்ததுன்பம்
நீக்கி - துன்பத்திலிருந்து விடுவித்து
உறாமை - இதுவரைவராத(துன்பத்தையும்) 
முன் + காக்கும் - முன்னறிந்துக்காக்கும்
பெற்றியார் - தன்மையுடையவரை
பேணி - போற்றி
கொளல் - துனையாக வைத்துக்கொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
443  அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
          பேணித் தமராக் கொளல்

பெரியாரைப்போற்றி தமக்கு சுற்றத்தாராக்கிக்கொள்ளுதல் பெறத்தக்கவரியபேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அரிய - அரிது அரியது
அரியவற்றுளெல்லாம் அரிதே - அரியவற்றுள் எல்லாம் அரிது
பெரியாரைப்பேணி - பெரியாரைக்கவனித்து
தமராக்கொளல் - தமர்+ஆக+ கொளல் (நம்முடையவராக வைத்துக்கொள்ளுதல்)
--------------------------------------------------------------------------------
அற்புதம் - வடமொழி

Thursday, June 24, 2010

621~625 இடுக்கண் அழியாமை (பொருட்பால் -> அரசியல்)

623  இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
          கிடும்பை படாஅ தவர்

துன்பத்திற்கு வருந்தாதவர் அந்த துன்பத்திற்கே துன்பமுண்டாக்குவர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இடும்பைக்கு + இடும்பை - துன்பத்திற்கு துன்பம்
படுப்பர் - கொடுப்பார் உண்டாக்குவர்
இடும்பை படாதவர் - துன்பப்படாதவர் வருந்தாதவர்
--------------------------------------------------------------------------------
படுப்பர் - அவன் பாடாபடுத்துவான்
துன்பதிற்கே துன்பம் - திருப்பதிக்கே லட்டு
--------------------------------------------------------------------------------
625  அடுக்கி வரினும் அழிவிலா னுற்ற
          விடுக்கண் இடுக்கட் படும்

அடுத்தடுத்து துன்பம் வந்துகொண்டேயிருந்தாலும் தனது கோட்பாட்டிலிருந்து மாறாமல் உறுதியாகயிருப்பவனையடைந்த துன்பமே துன்புற்றுபோகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அடுக்கி வரினும் - துன்பம் அடுத்தடுத்து வந்துகொண்டேயிருந்தாலும்
அழிவிலான் - உறுதியாகயிருப்பவனை
உற்ற - அடைந்த
இடுக்கண் - துன்பம்
இடுக்கண் + படும் - துன்புற்றுபோகும்
--------------------------------------------------------------------------------
'இடுக்கணழியாமை' 'இடுக்கண் அழியாமை' எது சரியென்று புரியவில்லை
--------------------------------------------------------------------------------

Wednesday, June 23, 2010

491~495 இடனறிதல் (பொருட்பால் -> அரசியல்)

493  ஆற்றாரு மாற்றி யடுப இடனறிந்து
          போற்றார்கட் போற்றிச் செயின்

தனக்குயேற்ற இடத்தையரிந்து பகைவரிடத்திலிருந்து தன்னை பாதுகாத்துச்செயற்பட்டால் வலிமையில்லாதவர்கூட வென்றுவிடுவார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஆற்றாரும் - வலிமையில்லாதவரும் ஆற்றலில்லாதவர்கூட
ஆற்றி + அடுப - வென்றுவிடுவார் முடித்துவிடுவார்
இடனறிந்து - தனக்கு சரியான இடத்தையரிந்து
போற்றார்கண் - பகைவரிடத்தில் (தன்னை போற்றார்)
போற்றி - தன்னை பாதுகாத்து
செயின் - செய்தால்
--------------------------------------------------------------------------------
ஆற்றி + அடுப - ஆற்றிடுவர் என்பதை இலக்கணத்திற்காக அவ்வாறு எழுதியிருக்கலாமோ
--------------------------------------------------------------------------------

வணக்கம்