Sunday, May 30, 2010

121~125 அடக்கமுடைமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

124  நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
          மலையினும் மாணப் பெரிது

தன்னிலையிலிருந்து வேறுபடாது அடக்கமாகயிருப்பவரின் உயர்வு மலையைவிட மிகப்பெரியது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நிலையின் - தன்னிலையிலிருந்து
திரியாது - மாறாது
அடங்கியான் - அடக்கமாகயிருப்பவரின்
தோற்றம் - உயர்வு
மலையினும் - மலையைவிட
மாணப்பெரிது - மிகப்பெரியது
--------------------------------------------------------------------------------
இன்

நிலையின் - (நிலை +) இன் = (நிலையில்) இருந்து
மலையின் - (மலை +) இன் = (மலையை) விட

451~455 சிற்றினஞ்சேராமை (பொருட்பால் -> அரசியல்)

454  மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
         கினத்துள தாகு மறிவு

ஒருவரின் செயல் அவரது எண்ணத்தையொட்டி அமைந்ததுபோல தோன்றினாலும் அது அவர்சேர்ந்த கூட்டத்தினரின் இயல்பால் அமைந்ததேயாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

மனத்து - எண்ணதில்
உளதுபோல - எண்ணத்தையொட்டி அமைந்ததுபோல
காட்டி - தோன்றினாலும்
ஒருவற்கு -
இனது - அவர்சேர்ந்த இனதினிடத்தே
உளது + ஆகும் - உள்ளதே உண்டானதேயாகும்
அறிவு - எண்ணம் அதனால்வெளிப்படுஞ்செயல்

Thursday, May 20, 2010

901~905 பெண்வழிச்சேறல் (பொருட்பால் -> அங்கவியல்)

904  மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
          வினையாண்மை வீறெய்த லின்று

மனைவிக்கு அஞ்சும் மறுமையில்லாதவனின் செயற்திறன் சிறப்பைத்தருவதல்ல
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பெண்வழிச்சேறல் - மனைவியையடைதல்
மனையாளையஞ்சும் - மனைவியை + அஞ்சும்
மறுமையிலாளன் - மறுமை + இல்லாதவன்
வினையாண்மை - செயற்திறன்
வீறெய்தலின்று - சிறப்பைதருவதல்ல
வீறு+ எய்தல்+ இன்று
வீறு - சிறப்பு செம்மை
எய்தல் - அடைதல் கொடுத்தல்
மனை - வீடு
மனைவி மனையாள்
மறுமையில்லாதவன் - மறு - அடுத்து - மனைவியையடைந்து வாழ்வின் மறு நிலைக்குச்செள்ளதவன்
--------------------------------------------------------------------------------

905  இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
           நல்லார்க்கு நல்ல செயல்

மனைவியைமதித்து அவள்சொல்லுக்கு அஞ்சினடப்பவர் நல்லவர்களுக்கு நன்மைசெய்ய எந்நாளும் அஞ்சமாட்டார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இல்லாளை - மனைவியைக்கண்டு மனைவிக்கு
அஞ்சுவான் - அஞ்சுபவன்
எஞ்ஞான்றும் - எந்நாளும்
நல்லார்க்கு - நல்லவர்களுக்கு
நல்ல செயல் - நன்மைசெய்ய
அஞ்சும் அற்று - அஞ்சமாட்டார்
--------------------------------------------------------------------------------

Monday, May 17, 2010

671~675 வினைசெயல்வகை (பொருட்பால் - அமைச்சியல்)

672  தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
          தூங்காது செய்யும் வினை

நிதானமாகச்செய்ய வேண்டிய காரியங்களை தாமதித்துச்செய்யலாம் ஆனால் விரைவாகச்செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இங்கு தூங்குக என்பது மெதுவாக என்றபொருளில் இடம்பெற்றுள்ளது
செயற்பால - (அவ்வாறாக) செய்யக்கூடியவை
--------------------------------------------------------------------------------
674  வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால்
          தீயெச்சம் போலத் தெறும்

முடிக்காதசெயல் அழிக்காதபகை இவ்விரண்டும் முற்றிலும் அனைக்காததீயைப்போல் பிற்காலத்தில் கெடுதற்செய்யும்.
(முற்றிலுமனைக்காததீயைப்போல்)
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வினை - தொடங்கியசெயல்
பகை - அழிக்கத்தொடங்கியபகை
என்ற + இரண்டின் - ஆகியயிரண்டின்
எச்சம் - செய்யாமல்விட்டமீதி
நினையும் + கால் - பிற்காலத்தில்
தீயெச்சம்போல - அனைக்காததீயைப்போல்
தெறும் - கெடுக்கும் கெடுதற்செய்யும்
--------------------------------------------------------------------------------
தீயெச்சத்தைப்போல - தீயெச்சம்போல
தீயைப்போல்சுடும் - தீபோல்சுடும்
அதைப்போல் - அதுபோல்
போல் - எப்பொழுதும் முன்வருஞ்சொல்லோடு சேர்ந்தேதான் வரும்

நினையுங்கால் என்பதற்கு நினைத்துப்பார்க்கும்போது என்று போருட்கொள்ளலாகாது இங்கு எதிர்காலதைக்குறிக்குஞ்சொல்லாக வந்துள்ளது
--------------------------------------------------------------------------------

Sunday, May 16, 2010

271~275 கூடாவொழுக்கம் (அறத்துப்பால் -> துறவறவியல்)

272  வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்நெஞ்சந்
          தானறி குற்றப் படின்

குற்றமென்றரிந்ததை தன்னெஞ்சு ஒத்து செய்தால் தவக்கோலம் பூண்ட வான்போலுயர்ந்த தோற்றம் என்னபயன்செய்யும் (மிக்கநல்லவர்போற்றதோற்றம் என்னபயன்செய்யும்)
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வானுயர் - வான்போலுயர்ந்த
தோற்றம் - தவக்கோலம் பூண்டதோற்றம்
எவன்செய்யும் - என்னபயன்செய்யும்
தானறி - தனக்கறிந்த
தன்நெஞ்சம் - தன்னெஞ்சொப்ப (தன்னெஞ்சு ஒப்ப)
குற்றப் படின் - குற்றஞ்செய்தால்
--------------------------------------------------------------------------------

273  வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
          புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று

மனத்தை அடக்கமுடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசுவொன்று புலித்தோலைப்போர்த்திக்கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வலியில் - வலிமையில்லாத
நிலைமையான் - இயல்புடையவன்
வல்லுருவம் - வலிமையாகதோன்றும்வுருவம் (வலிமையாக தோன்றும் உருவம்)
பெற்றம் - பெற்றிருப்பது
புலியின்றோல் - புலியின் + தோல்
போர்த்து - போர்த்திக்கொண்டு
மேய்ந்தற்று - மேய்வதைப்போன்றது
--------------------------------------------------------------------------------
வாய்கிழிய கத்திக்கோண்டுவந்தான் - 'க்'
கையில் கத்திகொண்டுவந்தான் - கத்தியை (கொண்டுவந்தான்) - 'யை' இல்லாமல் வரும்பொது 'க்' வராது

Thursday, May 13, 2010

791~795 நட்பாராய்தல் (பொருட்பால் -> அங்கவியல்)

791  நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
         வீடில்லை நட்பாள் பவர்க்கு

ஆராயாமல் நட்புகொள்ளுதலைவிட கேடு வேறெதுவுமில்லை ஏன்னென்றால் நட்பைமதிப்பவர்க்கு நட்புசெய்தபின் அதிலிருந்து வெளிவரமுடியாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நாடாது - ஆராயாமல்
நட்டல் + இன் - நட்புறுதலைவிட நட்புகொள்ளுதலைவிட
கேடு + இல்லை - வேறெதுவும் கேடில்லை
நட்ட + பின் - நட்புசெய்தபின்
வீடு + இல்லை - விடுதலையில்லை வெளிவரமுடியாது
நட்பு + ஆள்பவர்க்கு - நடப்பைப்பாராட்டுபவர்க்கு
--------------------------------------------------------------------------------
நாட்டம் - ஆராய்தல் சோதித்தல்
நாட்டங்கொள்ளுதல் - விரும்புதல்
--------------------------------------------------------------------------------

793  குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
          வினனும் அறிந்தியாக்க நட்பு

ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக்கொள்ளவேண்டும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குன்றா வினனும் - குன்றா இனனும் - குறைவில்லாத இனமும்
அறிந்தியாக்க நட்பு- அறிந்து ஆக்க நட்பு
--------------------------------------------------------------------------------
குடி இனம் பற்றி குறள் கூறிவிருப்பது சிந்திக்ககூடியத்து
--------------------------------------------------------------------------------

Monday, May 10, 2010

711~715 அவையறிதல் (பொருட்பால் -> அமைச்சியல்)

713  அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
           வகையறியார் வல்லதூஉ மில்

எவ்வாறான அவை என்று அறியாதவர் தான்பேசும் சொல்லின் கூறுபாட்டை தானே அறியமாட்டார் மற்றும் அந்தசொல்லும் சிறந்ததாகயிருக்காது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அவையறியார் - எவ்வாறான அவை என்று அறியாதவராக
சொல்லல் - பேசுவதை
மேற்கொள்பவர் -
சொல்லின் - பேசும் சொல்லின்
வகையறியார் - கூறுபாட்டை அறியார்
வல்லதூஉம் இல் - சிறந்ததும் இல்லை
--------------------------------------------------------------------------------
714  ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
          வான்சுதை வண்ணங் கொளல்

அறிவாளிகளுக்குமுன்னால் அறிவுடையவராகவிளங்கவேண்டும் அறிவில்லாதவர்முன்னால் வெண்சுண்ணாம்புப்போல் தம்மையும் அறிவற்றவர்களாய் காட்டிக்கொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஒளியார்முன் - அறிவாளிகளுக்குமுன்னால்
ஒள்ளியர் +ஆதல் - அறிவுடையவராகவிளங்கவேண்டும்
வெளியார்முன் - அறிவிலார்முன்
வான்சுதை - வெண்சுண்ணாம்பு
வண்ணம் + கொளல் - நிறம்பெற்றவேண்டும்
--------------------------------------------------------------------------------
715  நன்றென் றவற்றுள்ளு நன்றே முதுவருண்
          முந்து கிளவாச் செறிவு

தன்னைவிட மிகுந்தவர் இருக்கும் அவையில் முந்திக்கொண்டு பேசாத அடக்கம் நன்றென சொல்லப்படுபவைகளைவிட நல்லதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நன்று+ என்றவற்றுள்ளும் - நன்று என சொல்லப்படுபவைகளைவிட
நன்றே - நல்லதே
முதுவருள் - தன்னைவிட மிகுந்தவர் இருக்கும் அவையில்
முந்து - முந்திக்கொண்டு
கிளவா - சொல்லாத
விழுமம் - அடக்கம்
--------------------------------------------------------------------------------
அவையை + அறிதல் - அவைஅறிதல் - அவையறிதல்
பேசாத அடக்கம் - பேசாதவடக்கம் - பேசாவடக்கம்
--------------------------------------------------------------------------------

Sunday, May 9, 2010

361~635 அவாவறுத்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)

363  வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈ.ண்டில்லை
          ஆண்டு மஃதொப்ப தில்

அவாயின்மைபோன்ற சிறந்தச்செல்வம் இவ்வுலகிலில்லை அவ்வுலகிலும் அதற்கு இணையானது வேறொன்றுமில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வேண்டாமை - அவாயின்மை
அன்ன - போன்ற
விழுச்செல்வம் - விழுமம் + செல்வம்
விழுமம் - நல்ல சிறந்த
ஈ.ண்டு இல்லை - இங்கில்லை இவ்வுலகிலில்லை
ஆண்டும் - அங்கும் அவ்வுலகிலும்
அஃது + ஒப்பது + இல் - அதற்கு இணையானது இல்லை (அதற்கிணையானது)
--------------------------------------------------------------------------------
ஆசை - வடமொழி அவா - தமிழ்ச்சொல்
அவாவை + அறுத்தல் - அவாஅறுத்தல் - அவாவறுத்தல் ('அ' 'வ'வாக மாறியது
வேண்டாமையை + அன்ன - வேண்டாமைஅன்ன - வேண்டாமையன்ன ('அ' 'ய'வாக மாறியது
--------------------------------------------------------------------------------

364  தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
           வாஅய்மை வேண்ட வரும்

மனத்தூய்மையென்பது ஆசையில்லாமல் இருப்பதே ஆசையில்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

தூஉய்மை - தூய்மை
தூய்மையென்பதவாவின்மை - தூய்மை+ என்பது+ அவா+ இன்மை
மற்றது - அது
வாய்மை வேண்ட வரும் - (அது) மெய்பொருளை விரும்புவதால் வரும்
--------------------------------------------------------------------------------
"மற்றது" என்பது "மற்றவை"யென்று பொருளாகாது.
தூய்மை+ என்பது+ அவாவின்மை இதில் இரண்டாவதாக வரும் "அவாவின்மை"யை குறிப்பதற்காக வரும் சொல். "அது" என்று குறிப்பிட்டிருந்தால் "தூய்மையா" அல்லது "அவாவின்மையா" என்று பொருள் தெளிவாகவிளங்காது.

To put in English - "Ram and Gopi are brothers, the latter is the younger one". Had it been "Ram and Gopi are brothers, he is the younger one", then 'he' refers to whom?

ஆகா "latter"க்கு ஆனா தமிழ்ச்சொல் "மற்றது".
this can be clarified from kural no. 361 too.

Wednesday, May 5, 2010

246~250 அருளுடைமை (அறத்துப்பால் - துறவறவியல்)

249  தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
           அருளாதான் செய்யு மறம்

அருளில்லதவன் அறச்செயல்செய்வான் என்பது தெளிவில்லாதவன் உண்மையை காணமுடியாததைப்போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

தெருளாதான் - தெளிவில்லாதவன்
மெய்ப்பொருள் - உண்மையை
கண்டு + அற்றால் - காணமுடியாததைப்போலே
தேரின் - ஆராய்ந்துப்பார்த்தால் யோச்சிபாத்தாக்க
அருளாதான் - அருள்செய்யாதான்
செய்யும் அறம் - செய்யும் அறச்செயல்
--------------------------------------------------------------------------------
தேரின்
தேரின் - ஆராய்ந்துப்பார்த்தால்
தேரின் அருளாதான் - நல்லா தேர்தெடுத்த அருளிலாதவன்
இரண்டில் எதுசரியென்றுதெரியவில்லை
--------------------------------------------------------------------------------

250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
          மெலியார்மேல் செல்லு மிடத்து - 250

தன்னைவிடமெலிந்தவர் மேல் துன்புறுத்தசெல்லும்போது தன்னைவிடவலியவரின் முன் தான் அஞ்சிநிற்கும் நிலைமையை நினைக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வலியார்முன் - வலிமையானவர்முன் (தன்னைவிட)
தன்னை நினைக்க - தன்னை நினைத்துகொள்
தான் தன்னின் - தான் தன்னைவிட நாம் நம்மைவிட
மெலியார் - மெலிந்தவர்
மேல் செல்லுமிடத்து - மேல் (துன்புறுத்த)செல்லும்போது
--------------------------------------------------------------------------------
Tamil from Lorry
நினைக்க - நினை
முன்பெல்லாம் நம்மவூரு Lorryக்கு பின்னாடி 'நில்' ன்னு எழுதியிருக்கும் ஆனா இப்போ அத மாத்தி 'நிற்க' ன்னு எழுதுறாங்க.. அதுமாதிரி தான் நினைக்க - நினை.

ஆத்திச்சுடி கட்டளைசொல்லாக அமைத்து இருக்கும்
--------------------------------------------------------------------------------

Tuesday, May 4, 2010

961~965 மானம் (பொருட்பால் - குடியியல்)

963  பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
          சுருக்கத்து வேண்டு முயர்வு

ஒருவருக்கு செல்வம் நிறையும்போழுது பணிவுவேண்டும் செல்வங்குறைந்தபொழுது தாழ்வுநேர்த்திடாதவண்ணம் மனதிலும் செயலிலும் உயர்ந்துநிற்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

பெருக்கத்து - செல்வம் நிறையும்போழுது
வேண்டும் பணிதல் - பணிவுவேண்டும்
சிறியசுருக்கத்து - செல்வங்குறைந்தபொழுது
வேண்டும் உயர்வு - மனதிலும் செயலிலும் உயர்வுவேண்டும்
--------------------------------------------------------------------------------
'அதிகம்' மற்றும் 'வேகம்' என்ற வடமொழி சார்ந்த சொற்களுக்கு 'பெருக்கம்' 'நிறைவு' மற்றும் 'விரைவு' என்ற தமிழ்ச்சொற்களை பயன்படுத்தலாம்
--------------------------------------------------------------------------------
மானம் மான் அவ்மான் இவை வடமொழி சார்ந்த சொற்களாக இருக்கலாம் மனம் மான் இவைகூட பாரதி சொல்வதைபோல் நெஞ்சுபொருக்குதில்லையே இது தமிழரின் மரபாகயிருக்கலாம்
--------------------------------------------------------------------------------

964  தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
          நிலையி னிழிந்தக் கடை

மக்களின்நெஞ்சத்தில் உயர்ந்தயிடம் பெற்றிருந்தவொருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது தலையிலிருந்து உதிர்ந்தமயிருக்கு நிகராகக்கருதப்படுவார்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

தலையினிழிந்த - தலையின் இழிந்த - தலையிலிருந்துவிழுந்த
மயிரனையர் - மயிர் + அனையர் - முடிபோன்றவர் (முடி போன்றவர்)
மாந்தர் - மனிதர்
நிலையினிழிந்தக்கடை - தனது நிலையிலிருந்து விழுந்தபோது
கடை - போது
(தலையின்) - இன் - ஓரிடத்திலிருந்து
இழிந்த - விழுந்த இழிவு - தாழ்வு

151~155 பொறையுடைமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

153  இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
           வன்மை மடவார்ப் பொறை

வறுமையுள் வறுமை விருந்தினருக்கு உணவளிக்கயியலாமை வலிமையுள் வலிமை அறியாமையால் ஒருவர்செய்ததை பொறுத்துக்கொள்ளுதல்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

பொறையுடைமை - பொறுமையுண்டைமை
இன்மையுள் இன்மை - வறுமையுள் வறுமை
விருந்தொரால் - விருந்தினருக்கு உணவளிக்கயியலாமை
வன்மையுள் வன்மை - வலிமையுள் வலிமை
மடவார் (ப்) - அறிவற்றவ(ரை) அறியாமையால் ஒருவர்செய்ததை
பொறை - பொறுத்துக்கொள்ளுதல்
--------------------------------------------------------------------------------

154 நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
          போற்றி யொழுகப் படும்

நிறையுடையவனாகயிருக்குந்தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்கவேண்டினால் பொறுமையைப்போற்றிநடக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நிறையுடைமை - நிறை+ உடைமை நிறைவுடையமனிதராக
நீங்காமை வேண்டின் - நிங்காமல் இருக்கவேண்டுமானால்
பொற்யுடைமை - பொறுமை + உடைமை (யை)
போற்றி - காத்து
ஒழுகப்படும் - நடக்கவேண்டும்
வேண்டின் - வேண்டினால்