Wednesday, March 31, 2010

931~935 சூது (பொருட்பால் -> அங்கவியல்)

932  ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல்
            நன்றெய்தி வாழ்வதோ ராறு

ஒன்றைக்கொடுத்து நூறையிழக்கவைக்கும் சூதினையாடுவோர்க்கு
நன்மைபெற்றுவாழ்வதற்கான வழிவுண்டாகுமோ
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஒன்று + எய்தி - ஒன்றைக்கொடுத்து
நூறிழக்கும் - நூறை இழக்கவைக்கும் (நூறையிழக்கவைக்கும்)
சூதர்க்கும் - சூதாடுவோர்க்கு
உண்டாங்கொல் - உண்டாகுமோ
நன்றெய்தி - நன்மைபெற்று
வாழ்வதோர் ஆறு - வாழ்வதற்கானவழி
ஆறு - வழி
 --------------------------------------------------------------------------------
உண்டாங்கொல்  கொல்- ஒருவகை கேள்வியெழுப்புச்சொல்
 --------------------------------------------------------------------------------

Tuesday, March 30, 2010

191~195 பயனிலசொல்லாமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

192  பயனில பல்லார்முற் சொல்லல் நயனில
          நட்டார்கட் செய்தலிற் றீது
பயனில்லாதவற்றை பலர்முன்சொல்லுதல் நண்பரிடத்து அவருக்கு நெறித்தவறியச்செயல் செய்வதைவிட தீயது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பயனில - பயனில்லாதவற்றை
பல்லார்முன் - பலர்முன்
சொல்லல் - சொல்லுதல்
நயன் + இல - சிறப்பில்லா, நெறித்தவறியச்செயல்
நட்டார்கண் - நண்பரிடத்து
செய்தலின் - செய்வதைவிட
தீது - தீயது
--------------------------------------------------------------------------------
193  நயனில னென்பது சொல்லும் பயனில
          பாரித் துரைக்கு முரை

பயனில்லாதவற்றை விவரித்துப்பேசும்பெச்சு அவன் நீதியறியாத நெறிகெட்டவன் என்பதை காட்டிவிடும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பயனில - பயனில்லாதவற்றை
பாரித்து - விவரித்து
உரைக்கும் + உரை - சொல்லும்பெச்சு
நயனிலன் + என்பது - அவன் நீதியறியாத நெறிகெட்டவன் என்பதை
சொல்லும் - காட்டிவிடும்
--------------------------------------------------------------------------------
பாரித்து - விவரித்து
விரிந்துயிருப்பதால் உலகம் பார் என்றும் அழைக்கப்படுகிறதோ. உலகம் என்பது லோகம் என்னும் வடமொழியின் மருவல் தானே

Sunday, March 28, 2010

631~635 அமைச்சு (பொருட்பால் -> அமைச்சியல்)

632  வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
          டைந்துடன் மாண்ட தமைச்சு

அஞ்சாமை தங்குடிமக்களைக்காத்தல் நூற்களைக்கற்றல் கற்றதைநன்கறிதல் விடாமுயற்சி இவையைந்துடன் கூடியதே அமைச்சு
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வன்கண் - அஞ்சாமை
குடிகாத்தல் - தங்குடிமக்களைக்காத்தல்
கற்று + அறிதல் - நூற்களைக்கற்றல் கற்றதைநன்கறிதல்
ஆள்வினையோடு - விடாமுயற்சியோடு
ஐந்துடன் - இவையைந்துடன் (இவை ஐந்துடன்)
மாண்டது அமைச்சு - கூடியது அமைச்சு
--------------------------------------------------------------------------------
தன் + குடிமக்கள் = தங்குடிமக்கள் தங்கள் = தன் + கள்
--------------------------------------------------------------------------------

Thursday, March 25, 2010

981~985 சான்றாண்மை (பொருட்பால் -> ஒழிபியல்)

981  கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
          சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

செய்யத்தகுந்தவற்றை அறிந்துச்செயலாற்றி சன்றோராக விளங்கவேண்டுவோர்க்கு நற்குணங்களெல்லாம் அமைந்திருக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கடனறிந்து - செய்யத்தகுந்தவற்றை அறிந்து
சான்றாண்மை - சிறந்தோராக
மேற்கொள்பவர்க்கு - விளங்குவோருக்கு
நல்லவை + எல்லாம் - நற்குணங்கள் எல்லாம்
கடன் + என்ப - அமையகடமைப்பற்றிருக்கிறது எனப்படும்
--------------------------------------------------------------------------------
சான்றோர் சான்றிதழ் நற்சான்று
--------------------------------------------------------------------------------

982  குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
        மெந்நலத் துள்ளதூஉ மன்று
(குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று - 982)

நற்பண்பே சான்றோரின் சிறப்பு அவையல்லாமல் வெறும் உறுப்புகளின் அழகு எவ்வகை சிறப்பிலும் சேர்ந்ததில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குணநலம் - குணத்தின் சிறப்பே, பெருமையே
சான்றோர் நலனே - சான்றோரின் சிறப்பு
பிறநல - அது அல்லாமல் உறுப்புகளின் அழகு
எந்நலத்து - எவ்வகை சிறப்பிலும்
உள்ளதும் அன்று - சேர்ந்தது இல்லை
--------------------------------------------------------------------------------நலம்புனைந்துரைத்தல்’ என்ற அதிகாரத்திற்கு ’அழகின் சிறப்புரைத்தல்’ என்று பொருள். 'நலம்’ என்ற சொல் சிறப்பு, அழகு என்று பொருட்களிலும் வருகிறது.
பிறநலம் - இங்கு பிற என்ற சொல் உடலைக்குறிக்கிறது.
--------------------------------------------------------------------------------

983  அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
            டைந்துசால் பூன்றிய தூண்

அன்புடைமை செய்ததவறுக்கு நாணுதல் அனைவரோடும் ஒத்துவாழ்தல் இறக்கங்காட்டுதல் உண்மைபேசுதல் இவைஐந்தும் சான்றான்மையைத்தாங்கும் தூண்கள்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அன்பு - அன்புடைமை
நாண் - செய்ததவறுக்கு வெட்கப்படுதல்
ஒப்புரவு - அனைவரோடும் ஒத்துவாழ்தல்
கண்ணோட்டம் - இறக்கங்காட்டுதல்
வாய்மை (யோடு) - உண்மைபேசுதல்
ஐந்து - இவைஐந்தும்
சால்பு + ஊன்றிய - சான்றான்மையைத்தாங்கும்
தூண் - தூண்கள்
--------------------------------------------------------------------------------
வாய்மையோடு - வாய்மையோடுச்சேர்த்து ஐந்து
இத்தோட மூணு தபா ஆச்சி
--------------------------------------------------------------------------------

Wednesday, March 24, 2010

821~825 கூடாநட்பு (பொருட்பால் -> அங்கவியல்)

822  இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
          மனம்போல வேறு படும்

நமக்கு உற்றார்போல் தோன்றினாலும் ஒத்துவராதவரின் நட்பு பெண்ணின் எண்ணங்கள் மாறுவதைப்போல் மாறிவிடும்
(உற்றார்போற்றோன்றினாலும் )
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
இனம்போன்று - உற்றார்போன்றுதோன்றும்
இனமல்லார் - ஒத்துவராதவரின் 
கேண்மை - நட்பு
மகளிர்மனம்போல - பெண்ணின் எண்ணங்கள்போல்
வேறுபடும் - மாறிவிடும்
--------------------------------------------------------------------------------
825  மனத்தி னமையா தவரை எனைத்தொன்றும்
          சொல்லினாற் தேறற்பாற் றன்று

மனத்தால் நம்முடன் பொருந்தாதவரை எந்தவொருசெயலிலும் அவர்சொல்லைவைத்து தெளிவுபடக்கூடாது
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

மனத்தின் - மனத்தால்
அமையாதவரை - நம்முடன் பொருந்தாதவரை ஒத்துப்போகாதவரை
எனைத்து + ஒன்றும்- எந்தவொருசெயலிலும்
சொல்லினால் - அவர்சொல்லுஞ்சொல்லினால்
தேறல் + பாற்று - தெளிவுபடுத்தல்
அன்று - கூடாது
--------------------------------------------------------------------------------
பாற்று - முடிஞ்சபாடு அவன்பாட்டுக்கு தெளிந்தபாடு நான்பாட்டுக்கு
பாற்று - நிலைபெறுதல் ???
--------------------------------------------------------------------------------

Tuesday, March 23, 2010

371~375 ஊழ் (அறத்துப்பால் -> ஊழியல்)

373  நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்
         னுண்மை யறிவே மிகும்

நுட்பமான நூற்கள் பலவற்றைக்கற்றிருந்தாலும் தனது ஊழினாலேற்படும் பேதையறிவே மேம்பட்டு நிற்கும்
(நுட்பமானனூற்கட்பலவற்றை கற்றிருந்தாலும் - சரி)
------------------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
நுண்ணிய - நுட்பமான
நூல் + பல - நூற்கள் பலவற்றை
கற்பினும் - கற்றிருந்தாலும்
மற்றும் - அதன்பின்னும்
தன் + உண்மை + அறிவே - தனது ஊழினாலாகிய அறிவே
மிகும் - மேம்பட்டு நிற்கும்
--------------------------------------------------------------------------------
ஊழ் - தமிழ்
(தலை)விதி - வடமொழி
--------------------------------------------------------------------------------

Monday, March 22, 2010

921~925 கள்ளுண்ணாமை (பொருட்பால் -> அங்கவியல்)

922  உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரா
         னெண்ணப் படவேண்டா தார்

கள்ளையருந்தவேண்டாம் நல்லோரால் பாராட்டபடவேண்டாதவர் கள்ளை அருந்தவேண்டுமாயின் அருந்துக
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கள்ளை
உண்ணற்க - அருந்தவேண்டாம்
சான்றோரான் - நன்மதிப்பைப்பெற்றோரால்
எண்ணப்பட - (நினைத்துப்பார்க்க)பாராட்டபட
வேண்டாதார் - வேண்டாதவர்
உணில் + உண்க - அருந்தவேண்டுமாயின் அருந்துக
-------------------------------------------------------------------------------
உண் + அற்க - உண்ணற்க
குறிலை அடுத்துவரும் மெய்யெழுத்தோடு உயிரெழுத்து சேரும்போது அந்தமெய் இரட்டிக்கும்
மின் + அஞ்சல் - மின்னச்சல்
பொன் + ஆரம் - பொன்னாரம்
(நன்னூல் - 205)
பால் + ஆறு - பாலாறு நெடிலை அடுத்து இரடிக்கவில்லை
--------------------------------------------------------------------------------
923  ஈ.ன்றாண் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
          சான்றோர் முகத்துக் களி

யாதுசெய்யினும் மகிழும் தாயின்முன்புகூட கள்ளுண்பது துன்பந்தருவது அதனால் சான்றோர்முன் கள்ளுண்டுக்களிப்பது எவ்வளவு துன்பந்தரக்கூடியசெயலாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஈ.ன்றாள் + முகத்தேயும் - தாயின் முன்புகூட
இன்னாதால் - இன்னாது ஆதலால் - துன்பந்தருவது அதனால்
சான்றோர்முகத்து - சான்றோர்முன்
களி - கள்ளுண்டுக்களிப்பது
என்மற்று - எம்மாத்திரம் எவ்வளவு துன்பந்தரக்கூடியசெயல்
--------------------------------------------------------------------------------
கள் - தமிழ்
மது - வடமொழி
Vodka - Russian
Tequila - Mexican
Feni (Fenny) - Goa
கள் - தமிழ்நாடு
--------------------------------------------------------------------------------

875~880 பகைத்திறந்தெரிதல் (பொருட்பால் -> அங்கவியல்)

877  நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
        மென்மை பகைவ ரகத்து

தன் துன்பத்தின்வலியை புரிந்துகொள்ளாதவரிடம் துன்பத்தைவெளிப்படுத்தாதே அதுபோல் தன் வலிமையிங்குறைவை பகைவரிடத்துக்காட்டாதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நொந்தது + அறியார்க்கு - துன்பத்தை வலியை புரிந்துகொள்ளாதவரிடம்
நோவற்க - துன்பத்தை வெளிப்படுத்தாதே
மென்மை - வலிமையிங்குறைவை
பகைவர் அகத்து - பகைவரினடுவே பகைவரிடத்து
மேவற்க - மேலிட்டுக்காட்டாதே
--------------------------------------------------------------------------------
Highlight - மேலிட்டுக்காட்டு
கமுக்கம அமுக்கிவாசி - Soft pedal
--------------------------------------------------------------------------------
878  வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் 
          பகைவர்கட் பட்ட செருக்கு

வெல்லும்வகையரிந்து தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு தன்னைக்காத்துக்கொண்டால் பகைவரிடத்திலுண்டான பெருமிதம் அழிந்துவிடும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
வகை அறிந்து - வெல்லும் வகைகளையரிந்து
தன் செய்து - தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு
தன் காப்ப - தன்னை காத்துக்கொண்டால்
பகைவர்கண் பட்ட - பகைவரிடத்தில் உண்டான
செருக்கு - பெருமிதம் , களிப்பு
மாயும் - அழிந்துவிடும், மாண்டுவிடும்
--------------------------------------------------------------------------------

Thursday, March 18, 2010

721~725 அவையஞ்சாமை (பொருட்பால் -> அமைச்சியல்)

722  கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
          கற்ற செலச்சொல்லு வார்

(கற்றவர்கள் உள்ள அவையில்) கற்றவர்களுள்ளவவையில் தாங்கற்றவற்றை அவர்கள் ஏற்குமாறுச்சொல்லுபவர் கற்றவர்களிலேயே மிககற்றவர் எனப்படுவர்
---------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கற்றார்முன் - கற்றரிந்தவர்முன்
கற்ற - தான் கற்றவற்றை
செலச்சொல்லுவார் - ஏற்கும்படிச்சொல்லுபவர்
கற்றாருள் + கற்றார் - கற்றவர்களிலேயே மிககற்றவர்
எனப்படுவர்
--------------------------------------------------------------------------------

அவை + அஞ்சாமை - அவையஞ்சாமை அ ய வாகமாறியது
--------------------------------------------------------------------------------

Wednesday, March 17, 2010

531~535 பொச்சாவாமை (பொருட்பால் -> அரசியல்)

531  இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
         வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு

மிகுந்தமகிழ்ச்சியினால் ஏற்படுகின்றமறதி எல்லைகடந்த சினத்தைவிட தீமையானதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பொச்சாவாமை - மறவாமை
சிறந்த + உவகை - மிகுந்த அகமகிழுதல்
மகிழ்ச்சியில் + சோர்வு - மகிழ்ச்சியிலிருக்கும்போது ஏற்படுகின்றமறதி
இறந்த - எல்லைகடந்த
வெகுளியின் - சினத்தைவிட (இன் - விட)
தீதே - தீமையானதே
--------------------------------------------------------------------------------
இறவு - எல்லை இறப்பு - முடிவைக்காணுதல்
ஆனந்தம் - வடமொழி உவகை - தமிழ்
--------------------------------------------------------------------------------
532  பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
          நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

எந்நாளும் வறுமையிலிருப்பது ஒருவனின் அறிவை கொன்றுவிடுவதைப்போல ஒருவனின் மறதி அவனின் புகழைக்கொன்றுவிடும்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

அறிவினை - அறிவை அறிவுதனை
நிச்ச நிரப்பு - எந்நாளும் வறுமை
கொன்று + ஆங்கு - கோல்வதைப்போல் ஆங்கே அவ்வண்ணம்
பொச்சாப்பு - மறதி
கொல்லும் புகழை - புகழைக்கொன்றுவிடும்
--------------------------------------------------------------------------------
நிச்ச நிரப்பு - எந்நாளும் பிறரிடங்கையேந்தி வயிற்றை நிரப்புதல் - Daily wages.??
--------------------------------------------------------------------------------

Tuesday, March 16, 2010

261~265 தவம் (அறத்துப்பால் -> துறவறவியல்)

263  துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
        மற்றை யவர்கள் தவம்

பற்றுகளைத்துறந்தவர்க்கு உணவு உடை இருப்பிடம் போன்ற பயனுடையவைகளை தந்துதவவேண்டி இல்லறதிற்வாழ்வோர் தவஞ்ச்செய்ய மறந்துவிட்டனரோ
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

துறந்தார்க்கு - பற்றுகளைத்துறந்தவர்க்கு
துப்புரவு - உணவு உடை இருப்பிடம் போன்ற பயனுடையவைகள்
வேண்டி - (அவ்வாறு) உதவவேண்டி
மற்றையவர்கள் - (தவஞ்ச்செய்யாத) இல்லறதிற்வாழ்வோர்
தவம் + மறந்தார்கொல் - தவஞ்ச்செய்ய மறந்துவிட்டனரோ
--------------------------------------------------------------------------------
பெரியோர்களுக்கு உதவும்போது தாஞ்ச்செய்யவேண்டிய கடமைகளையும் மறந்துவிடக்கூடாது என்ற போருட்கொள்ளலாம் 
--------------------------------------------------------------------------------
துப்பு - பயன்படுபவை - எதாவது துப்புகிடைத்ததா
--------------------------------------------------------------------------------
மறந்துவிட்டனரோ - தமிழில் Punctuations கிடையாது கேள்விக்குறி "?" தேவையில்லை
உணவு, உடை, இருப்பிடம் - இலக்கணதோடெழுதினால் comma தேவையில்லை
--------------------------------------------------------------------------------

Monday, March 15, 2010

401~405 கல்லாமை (பொருட்பால் -> அரசியல்)

403  கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்
        சொல்லா திருக்கப் பெறின்

கற்றவர்முன் பேசாதிருந்தால் கல்லாதவரும் மிகநல்லவராகவே கருதப்படுவார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கற்றார்முன் - கற்றவர்முன்
சொல்லாது + இருக்கப்பெறின் - பேசாதிருந்தால் பேசாதிருக்கப்பேற்றால்
கல்லாதவரும் - கற்றறிந்திடாதவர்கூட
நனிநல்லர் - மிகநல்லவரே
--------------------------------------------------------------------------------

405  கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
          சொல்லாடச் சோர்வு படும்

படிக்காதவொருவன் அவையில் முன்னின்று உரையாடும்போது தன்மீது தான்வைதிருக்கும் மதிப்பு சோர்வுபடும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கல்லா + ஒருவன் - படிக்காதவொருவனின்
தகைமை - தன்மீது தான்வைதிருக்கும் மதிப்பு
தலைப்பு + எய்து - அவையில் முன்னின்று
சொல்லாட - உரையாடும்போது பேசும்போது
சோர்வுபடும் -
--------------------------------------------------------------------------------
ஒருவனின் + தகைமை - ஒருவன்றகைமை
’இன்’ தொக்கிவரும்போது இரண்டுசொற்களும் ஒன்றுசேர்ந்துதான் வரும் - ஒருவன்தகைமை - ஒருவன்றகைமை
கத்தியை + எடுத்தான் - ’ஐ’ தொக்கிவரும்போது - கத்தியெடுத்தான் என்றுதான் வரும்

Sunday, March 14, 2010

556-560 கொடுங்கோன்மை (பொருட்பால் -> அரசியல்)

558  இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா        
          மன்னவன் கோற்கீழ்ப் படின்

நீதியின்முறைபடி ஆட்சிபுரியாத மன்னவனினாட்சியிங்கீழ் பொருளுடைமைபெறப்பட்டாலும் அது வறுமையிலுங்கொடியதேயாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இன்மையின் இன்னாது - வறுமையிலும் கொடியது(வருமையிலுங்கொடியது)
முறைசெய்யா - நீதியின்முறைபடி ஆட்சிபுரியாத
மன்னவன்கோல் + கீழ் - மன்னவனின் ஆட்சியிங்கீழ்
உடைமைபடின் - பொருளுடைமைபெறப்பட்டால்
--------------------------------------------------------------------------------

Thursday, March 11, 2010

511~515 தெரிந்துவினையாடல் (பொருட்பால் -> அரசியல்)

தெரிந்துவினையாடல் -  ஒருவரால் செய்யக்கூடியசெயலை அவரிடங்கொடுத்து ஆளுந்திறன்
--------------------------------------------------------------------------------
514  எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
         வேறாகு மாந்தர் பலர் - 514

எல்லாவகைகளிலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தபின்னும் செயலின் வகைவேறுபாடுகளின்விளைவாக அதைச்செய்யக்கூடிய மக்கள் பலவகைப்படுகின்றனர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
எனைவகையான் - எல்லாவகையும்
தேறியக்கண்ணும் - தேர்ந்தெடுத்தபோதிலும்
வினைவகையான் - செயளின்வகையால்
வேறாகும் - வேறுபாடும்
மாந்தர்பலர் - மக்கள் பலருள்ளனர்
--------------------------------------------------------------------------------
515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
         சிறந்தானென் றேவற்பாற் றன்று

நன்கறிந்து இடையூறுகளைப்பொறுத்து செய்துமுடிப்பவனிடமல்லாமல் மனதிற்குச்சிறந்தவனென்றுபட்டவனிடம் ஒரு வேலையை ஏவக்கூடாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறிந்து - செயலை நன்கு அறிந்து
ஆற்றி - (இடையூறுகளை) பொறுத்து
செய்கின் +பாற்கு - செய்பவனுக்கு
அல்லால் - அல்லாமல்
சிறந்தானென்று - மனதிற்குச்சிறந்தவனென்று
வினைதான் - ஒரு செயல்
ஏவல் பாற்று அன்று- ஏவும் தன்மையை உடையதற்று
--------------------------------------------------------------------------------
நன்கறிந்து இடையூறுகளைப்பொறுத்து செய்துமுடிப்பவனிடமல்லாமல் ஒரு வேலையானது மனதிற்குச்சிறந்தவனென்றுபட்டவனிடம் ஏவுந்தன்மையை உடையதற்று
--------------------------------------------------------------------------------

Wednesday, March 10, 2010

305~310 வெகுளாமை (அறத்துப்பால் -> துறவறவியல்)

வெகுளாமை - சினங்கொள்ளாமை

308  இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
           புணரின் வெகுளாமை நன்று

சுடர்நெருப்பு நம்மேல் படருவதுபோல் துன்பஞ்செய்திருந்தாலும் அவன் உறவுகொள்ளவரும்போது சினங்கொள்ளாமை நன்று
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இணர் - பலசுடர்களையுடைய
எரி - நெருப்பில்
தோய் அன்ன - மூழ்கடிப்பதைப்போல்
இன்னா செயினும் - துன்பம் செய்திருந்தாலும்
புணர் இன் - சேரவரும்போது
வெகுளாமை - சினங்கொள்ளாமை
நன்று

வெகுளி - சினம்
--------------------------------------------------------------------------------
தோய்த்தல் - நனைத்தல் குளித்தல் ஊறவைத்தல்
தோய் - தயிர் தோய்தல், மாவு தோய்தல்
தோயப்பம் (தோய் அப்பம்) தான் மருவி தோசை ஆகிவிட்டது
--------------------------------------------------------------------------------
309  உள்ளிய வெல்லா முடனெய்தும் உள்ளத்தா
       லுள்ளான் வெகுளி யெனின்

ஒருவன் உள்ளத்தில் சினங்கொள்ளவில்லையென்றால்
அவன் எண்ணியயெள்ளவற்றையும் உடனேயடைவான்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
வெகுளி - சினத்தை
உள்ளத்தால் + உள்ளான் - உள்ளத்தால் நினைக்காதவன்
எனின் - (உள்ளத்தாலுங்நினைக்காதவன்) என்றால்
உள்ளிய + எல்லாம் - எண்ணியதெல்லாம்
உடன் + எய்தும் - உடனேகிடைக்கும்
--------------------------------------------------------------------------------

Tuesday, March 9, 2010

591~595 ஊக்கமுடைமை (பொருட்பால் - அரசியல்)

593  ஆக்க மிழந்தேமென் றல்லாவார் ஊக்க
        மொருவந்தங் கைத்துடை யார்

மனத்தில் ஊக்கத்தை ஒருவகப்படுத்தி உறுதியாகயிருப்பவர் செயலை செல்வத்தை இழந்துவிட்டோமென்று வருந்தமாட்டார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஆக்கம் - செயல் செல்வம்
இழந்தேம் + என்று - இழந்துவிட்டோமென்று அல்லாவார் - அல்லற்படமாட்டார் வருந்தமாட்டார்
ஊக்கம் + ஒருவந்தம் -ஊக்கத்தை மனத்தில் ஒருவகப்படுத்துதல்
கைத்து + உடையார் - தன்னிடமுடையார்
--------------------------------------------------------------------------------
594  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
           வூக்க முடையா னுழை

எந்தச்சூழலிலும்மாறாத ஊக்கத்தையுடையவனிடம் நற்பயன் தானாகவே வழிகேட்டு சென்றடையும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அசைவு இலா - அசைக்கமுடியாத மாறாத நிலையான
ஊக்க உடையான் - ஊக்கத்தை உடையவனிடம்
உழை - அவ்விடம்
ஆக்கம் - ஆக்கப்பொருள் (எதற்காகச்செயல்படுகிறானோ)
அதர்வினாய் - அதுவே வினாவி, தானாகவே வழிகேட்டு
செல்லும் - சென்றடையும்
--------------------------------------------------------------------------------
595  வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
           முள்ளத் தனைய துயர்வு

நீரின் அளவையொட்டியதது மலர்தண்டின் நீட்டம் மனிதரின் உள்ளத்திலுள்ள ஊக்கத்தையொட்டியதது அவரின் உயர்வு
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வெள்ளத்து + அனைய - நீரின் அளவையொட்டி அளவைச்சார்ந்தது
மலர்நீட்டம் - மலர்தண்டின் நீட்டம்
மாந்தர்தம் - மனிதரின்
உள்ளத்து+ அனையது - ஊக்கத்தையொட்டியது
உயர்வு - (ஒருவரின்) உயர்வு
--------------------------------------------------------------------------------
மனம் மன் - வடமொழியாகயிருக்கலாம் - மற்றொரு தமிழ்ச்சொல் உள்ளம்
மனம்போல் மாங்கல்யம் - உள்ளம்போல் உயர்வு
--------------------------------------------------------------------------------

Sunday, March 7, 2010

216~220 ஒப்புரவறிதல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

ஒப்புரவு + அறிதல் - அறநூற்களிட்கூறப்படுவதுமட்டுமன்றி தாமேஅறிந்து நடந்துக்கொள்ளுந்தன்மைகள் ஒப்புரவறிதல் எனப்படுகிறது

212  தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
          வேளாண்மை செய்தற் பொருட்டு

தன் உழைப்பீட்டிய செல்வமுழுவதும் தகுதிவுடையவருக்கு பயன்செய்தவதர்க்கேயாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

தாளாற்றி - உழைத்து
தந்த - (உழைப்புத்) தந்த
பொருளெல்லாம் - பொருள் முழுவதும்
தக்கார்க்கு - தகுந்தவர்க்கு
வேளாண்மை - பயன்
செய்தல் + பொருட்டு - செய்தவதர்க்காகவே
--------------------------------------------------------------------------------
216  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
        நயனுடை யான்கட் படின்

நீதிவுடையவனிடத்தில் செல்வஞ்சேருதல் ஊரினுள்ளே பயனுடையமரத்தில் பழம்பழுத்ததுப்போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பயன்மரம் - பயன் தரும் மரம்
உள்ளூர் - ஊரினுள்ளே
பழுத்தது + அற்றால் - பழம்பழுத்ததுப்போன்றது
நயன் + உடையான் +கண் - நீதியறிந்தவனிடத்தில், நெறி உடையவனிடத்தில்
செல்வம் படின் - செல்வஞ்சேருதல்
--------------------------------------------------------------------------------

Saturday, March 6, 2010

651~660 வினைத்தூய்மை (பொருட்பால் -> அமைச்சியல்)

652  என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
          நன்றி பயவா வினை

பிறருக்கு நன்மையீட்டாமல் புகழைமட்டும் ஈட்டும் செயலை தவிர்க்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

புகழொடு - புகழும்
நன்றி - நன்மையும்
பயவா - கொடுக்காத, ஈட்டாத, தராத
வினை - செயலை
என்றும் - என்றும் எப்பொழுதும் எந்நிலையிலும்
ஒருவுதல் வெண்டும் - தவிர்தல் வேண்டும்
--------------------------------------------------------------------------------
புகழொடுநன்றி - புகழும் நன்மையும் தராத செயலை என்றும் எப்பொழுதும் தவிர்தல் வேண்டும் - இவ்வரும் போருட்கொள்ளலாமோ
--------------------------------------------------------------------------------
653 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
          அதும் என்னு மவர்

மேன்மேலும் உயரமுயல்கின்றவர் புகழை அழிக்கும் செயலை செய்யாமல் தவிர்க்கவேண்டும்.
---------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஓதல் வேண்டும் - ஒழிக்கவேண்டும்
ஒளிமாழ்கும் - புகழை அழிக்கும் (கத்தி 'மழுங்கி'விட்டது - இதைத்தழுவி வருவதுதானோ)
செய்வினை - செய்கின்ற செயல்
ஆதும் - மேலாகும் உயரும் (ஆதவன் !!??!!)
என்னு மவர் - என்பவர் என்று கூறுபவர்
---------------------------------------------------------------------------------
659  அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் இழப்பினும்
        பிற்பயக்கும் நற்பா லவை

பிறரை அழவைத்துப்பெற்றசெல்வம் தாம் அழுதுவருந்தும்படி போய்விடும் நல்லவழியில் பெற்றசெல்வம் இழந்தாலும் பின்வந்து பயன்தரும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அழக்கொண்ட + எல்லாம் - பிறரை அழவைத்துப்பெற்றசெல்வம் எல்லாம்
அழப்போம்                                 - அழுதுவருந்தும்படிபோய்விடும்
நற்பாலவை                              - நல்லவழியில் பெற்றசெல்வம்
இழப்பினும்                                - இழந்தாலும்
பிற்பயக்கும்                              - பின்வந்து பயன்தரும்

---------------------------------------------------------------------------------

511~515 தெரிந்துவினையாடல் (பொருட்பால் -> அரசியல்)

515  அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
        சிறந்தானென் றேவற்பாற் றன்று - 515

-------------------------------------------------------------------------------- 
செயலையரிந்து செய்துமுடிப்பவரிடம் அல்லாமல் தம்மனதுக்கு சிறந்தவனென்றுபட்டவனிடம் செயலை ஏவக்கூடாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
அறிந்து + ஆற்றிச்செய்கின்+பாற்கு - செயலையரிந்து செய்பவனிடம்
அல்லால்                                                       - அல்லாமல்
வினைதான்                                                  - ஒருசெயலை
சிறந்தான் +என்று                                     - தம்மனதுக்கு சிறந்தவனென்றுபட்டவனிடம்
ஏவல் + பால் + அன்று                           - செயலை ஏவக்கூடாது
--------------------------------------------------------------------------------
ஏவுகணை - commanded arrow
somebody is doing a good job of coining new words in Tamil.

Thursday, March 4, 2010

851 ~ 855 இகல் (பொருட்பால் -> அங்கவியல்)

853  இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
       தாவில் விளக்கந் தரும்

மனவேறுபாடு என்னும் துன்பந்தரும் நோயைநீக்கினால் நீங்காத தோய்வில்லாதபுகழைத்தரும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எவ்வம்                    - துன்பம், வெறுப்பு
இகலென்னும் எவ்வநோய் - மனவேறுபாடு என்னும் துன்பந்தருந்நோய்
நீக்கின்                     - நீக்கினால்
தவல் + இல்லா - நீங்காத
தவல்                       - நீங்குதல்
தாவில்                   - தாவு+இல்
தாவு                         - தாழ்வு, வருத்தம், கெடுதல்
தாவில்விளக்கந்தரும் - தோய்வில்லாதபுகழைத்தரும்

--------------------------------------------------------------------------------

854  இன்பத்து ளின்பம் பயக்கும் இகலென்னுந் 
          துன்பத்துட் டுன்பங் கெடின்

மனவேறுபாடு எனப்படும் துன்பத்திலேயே பெரியதுன்பத்தை நெஞ்சிலிருந்து அகற்றினால் அது இன்பத்திலேயே பெரியயின்பதை கொடுக்கும்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

இகல் - மனவேறுபாடு
இன்பத்துள் + இன்பம் - இன்பத்திலேயே பெரியயின்பம்
பயக்கும் - கொடுக்கும்
இகல் + என்னும் - மனவேறுபாடு என்னும்
துன்பத்துள் + துன்பம் - துன்பத்திலேயே பெரியதுன்பம்
கெடின் - அகன்றால்
--------------------------------------------------------------------------------

Wednesday, March 3, 2010

910-1 வரைவின்மகளிர்

வரைவின்மகளிர் (பொருட்பால் -> அங்கவியல்)
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் - 916

தனது புகழைப்பரப்பவிரும்புவோர் உடலழகைமெருகூடி சிற்றின்பத்தைப்பரப்பும் பெண்ணிந்தோளில் இன்புற்று தோய்ந்துகிடக்கமாட்டார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
தந்நலம் பாரிப்பார் - தனதுபுகழை பரப்பவிரும்புவோர்
தகைசெருக்கி - உடலழகைமெருகூடி
புல் + நலம் + பாரிப்பார் - சிறியஇன்பத்தைப்பரப்பும் பெண்ணின்
தோள்தோயார் - தோளில் இன்புற்று தோய்ந்துகிடக்கமாட்டார்
--------------------------------------------------------------------------------
வரைவின்மகளிர்
வரையறை வரைமுறை - வரை - கட்டுப்பாடு கோட்பாடு - வரைவின்றி இருக்கும் மகளிர்