Sunday, January 31, 2010

295~300 வாய்மை (அறத்துப்பால் -> துறவறவியல்)

297  பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
           செய்யாமை செய்யாமை நன்று

செய்யக்கூடாததை செய்யாததால் விளையும் நன்மையைவிட பொய்கூறாத பண்பை தவறாமல்கடைபிடித்தல் நன்மைதருவதாகும்

தெளிபொருள் விளக்கம்
பொய்யாமை - பொய்சொல்லாத பண்பு
பொய்யாமையாற்றின் - பொய்யாமை+ஆற்றின் - தவறாமல் கடைபிடித்தால்
அறம்பிறசெய்யாமை - அறவழியல்லாத செய்யக்கூடாத செயலை
செய்யாமை நன்று - செய்யாததால் விளையும் நன்மையைவிட நன்று

Thursday, January 28, 2010

185~190 புறங்கூறாமை(அறத்துப்பால் -> இல்லறவியல்)

188  துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
          என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிவரின் குறையைக்கூட தூற்றுகின்றகுணமுடையவர்கள் அயலாரைப்பற்றி என்னதான் பேசமாட்டார்கள்

தெளிபொருள் விளக்கம்
துன்னியார் - நெருங்கிவர்
குற்றமும் - குற்றத்தை
தூற்றும் - புறங்கூறும்
மரபினர் - இயல்புடையவர் பழக்கமுடையவர்
என்னைகொல் - என்னதான் செய்யமாட்டார்கள்

ஏதிலார் மாட்டு - அயலாரிடத்து

Wednesday, January 27, 2010

95~100 இனியவைகூறல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

99   இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
          வன்சொல் வழங்கு வது

இனியசொல் இன்பந்தருவதை உணர்ந்தவன் எதற்காக கடுஞ்சொல்லைச்சொல்லவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இன்சொல் - இனியசொல்
இனிது + ஈன்றல் - இன்பந்தருவதை
காண்பான் - அறிந்தவன்
எவன்கொலோ - எதற்கோ எதற்காக
வன்சொல் - வன்மையானசொல்லை
வழங்குவது - சொல்லுவது
--------------------------------------------------------------------------------
100  இனிய வுளவாக இன்னாத கூறல்
          கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையானசொற்களிருக்கும்போது அவற்றைவிட்டு கடுமையாகப்பேசுவது கனிகளைவொதுக்கிவிட்டு காய்களைத்தின்பதற்கு நிகராகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
இனிய - இனிமையானசொற்கள்
உளவாக - உள+ஆக இருக்க
இன்னாத - கடுமையானத இனாததை புண்படுத்துவதை
கூறல் - பேசுவதுகனியிருப்ப - கனி + இருக்க
காய்கவர்ந்தற்று- காயை விரும்புவது போன்றது
அற்று - போன்று

Tuesday, January 26, 2010

735 -740 நாடு (பொருட்பால் -> அங்கவியல்)

736  கேடறியா கெட்ட விடத்தும் வளங்குன்றா
            நாடென்ப நாட்டிற் றலை

எவ்வித கெடுதலையும் கண்டறியாத கேடுதல் வந்துவிட்டபோதிலும் வளமைகுறையாத நாடே அனைத்து நாடுகளிலும் சிறந்ததெனப்படும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கேடு அறியா - கெடுதலைக்கண்டறியாத, கெடுதலேதும் காணாத
கெட்ட இடத்தும் - கேடுதல் வந்துவிட்டபோதிலும்
வளங்குன்றா - வளமை குறையாத
நாடு என்ப - அவ்வாறான நாட்டையே
நாட்டின் - அனைத்து நாடுகளிலும்
தலை - முதன்மையான சிறந்த (நாடு)
(என்ப - எனப்படும்)
--------------------------------------------------------------------------------
738  பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
         அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

துன்புமில்லாமை செல்வம் செழுமையானபயிர்விளைவு இன்பம் காவல் இவ்வைந்தும் நாட்டிற்கழகெனப்படும்
--------------------------------------------------------------------------------

தெளிபொருள் விளக்கம்

பிணி + இன்மை - நோய் துன்பும் இல்லாமையும்
செல்வம்                  - செல்வமும்
விளை                      - செழுமையான பயிர்விளைவும்
இன்பம்                     - இன்பமும்
ஏமம்                          - காவலும்
அணியென்ப          - அழகெனப்படும்
நாட்டிற்கு -
இவ்வைந்தும்       - இந்த + ஐந்தும்
--------------------------------------------------------------------------------
739  நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
          நாட வளந்தரு நாடு

முயற்சிசெய்து தேடாமலேயே நலந்தரும் வளத்தை உடைய நாடு சிறந்தநாடென கூறப்படும் தேடிமுயன்றால்தான் வளந்தரும் நாடு சிறந்த நாடல்ல
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
நாடு + என்ப                          - நாடெனகூறப்படுவது
நாடா                                        - தேடாமல்
வளத்தன                                - வளமையுடையன
நாட                                           - தேட
நாட+வளம்+தரும் நாடு - தேடிமுயன்றால் தான் வளந்தரும் நாடு
நாடு + அல்ல

தேடி முயன்றால் தான் --> தேடிமுயன்றால்தான் --> தேடிமுயன்றாற்றான்

Monday, January 25, 2010

560-1 வெருவந்தசெய்யாமை

வெருவந்தசெய்யாமை (பொருட்பால் -> அரசியல்)
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - 563
அஞ்சும்படியான கொடுமைகளைச்செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால் அவன் நிச்சயமாக விரைவில் கெடுவான்

தெளிபொருள் விளக்கம்
வெருவந்த - அஞ்சத்தக்க செயல்களை
செய்து + ஒழுகும் - செய்து நடக்கும்
வெங்கோலன் ஆயின் - கொடுங்கோலனாயிருந்தால்
ஒருவந்தம் - திண்ணமாக நிச்சயமாக
ஒல்லைக் கெடும் - விரைவாக கெடுவான்

Tuesday, January 19, 2010

110-1 நடுவுநிலைமை

நடுவுநிலைமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)
செப்ப முடையவ னாக்கம் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து - 112
நடுவுநிலையாளனின் செல்வம் அழிவில்லாமல் வழிவழித்தலைமுறையினர்க்கும் வலியதுனையளிப்பதாகும்

தெளிபொருள் விளக்கம்
செப்பம் - நேர்மை, சரியானநிலை
உடையவன் + ஆக்கம் - (சரியானநிலை) உடையவனின் + செல்வம் (உருவாகியவை)
சிதைவு + இன்றி - அழிவில்லாமல் வழுக்கியும் - தவறியும்
எச்சத்திற்கும் - எஞ்சியத்திற்கும் பின்வற்பவருக்கும்
ஏமாப்பு +உடைத்து
ஏமாப்பு - வலியதுனை
உடைத்து - உடையது
துனையை +அளிப்பது --> துனைஅளிப்பது --> துனையளிப்பது

Monday, January 18, 2010

136~140 ஒழுக்கமுடைமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

138  நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்கம்
          என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம் நன்மைக்குக்காரணமாகும் தீயொழுக்கம் என்றும் துன்பந்தரும்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

நன்றிக்கு - நன்மைக்கு
வித்தாகும் - காரணமாகும்
நல்லொழுக்கம் - நல்ல + ஒழுக்கம்
தீயொழுக்கம் - தீமையான + ஒழுக்கம்
என்றும் -
இடும்பை - துன்பம்
தரும் -
--------------------------------------------------------------------------------
காரணம் - வடமொழி சார்ந்த சொல் 'காரண்'
வித்து விளைவு in English cause & effect
வித்து - விதை
--------------------------------------------------------------------------------
139  ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
          வழுக்கியும் வாயாற் சொலல்

ஒழுக்கமுடையவர்க்கு தவறியுந்தன்வாயால் தகாதசொற்களைச்சொல்வது முடியாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஒழுக்கமுடையவர்க்கு
வழுக்கியும் - தவறியும்
தீய - தீயசொற்களை
வாயால் + சொலல் - தன்வாயாற்சொல்வது
ஒல்லாவே - முடியாது
--------------------------------------------------------------------------------

Sunday, January 17, 2010

430-1 குற்றங்கடிதல்

குற்றங்கடிதல் (பொருட்பால் -> அரசியல்)
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகு மிறைக்கு - 436
முதலில் தனது குறையை நீக்கிகொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக்கண்டுசொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்

தெளிபொருள் விளக்கம்
தன் + குற்றம் + நீக்கி - தனது குறையை நீக்கிவிட்டு
பிறர் + குற்றம் + காண்கின் + பின்- (பின்னர்) பிறர் குறையைக்கண்டுசொன்னால்
பின் - அவ்வாறு செய்தபின்
என் + குற்றமாகும் + இறைக்கு - என்ன குற்றமாகும் அரசனுக்கு

Thursday, January 14, 2010

11~15 வான்சிறப்பு (அறத்துப்பால் - பாயிரவியல்)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை - 12

யாருக்கு உணவுப்பொருட்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ அவர்களுக்கே அந்தமழை அருந்தும் உணவாகவுமாகி அரிய தியாகத்தைச்செய்கிறது
--------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

துப்பார்க்கு - உண்பவர்க்கு
துப்பாய - நன்மையாகி (துப்பு+ஆகிய துப்பாக)
துப்பாக்கித்துப்பார்க்கு - துப்பு ஆக்கி (உணவை) உண்டாக்கி உண்பவர்க்கு
துப்பாய - துப்பு+ஆக துப்பாக பயனுள்ளதாக
தூவும் மழை
-------------------------------------------------
எனக்கெட்டியது
உண்பவர்களுக்கு பயன்படுவதை உண்டாக்கி உண்பவர்க்கு (உழவருக்கு) பயனுள்ளதாக பேயும் மழை

என் கருத்து
துப்புகெட்டவன் துப்பில்லதாவன் - பயனில்லாதவன்
துப்பு - பயன்
பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதான (உணவை) பயனுள்ளதாக (உண்டாக்கிதரும்) பயனுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக தூவும் மழை
-------------------------------------------------

விண்யின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி - 13

மழைபெய்யாமல் பொய்படுமானால் கடல்சூழ்ந்த அகன்றவுலகதின் உள்ளேநின்று பசி உயிர்களை வருத்தும்
-------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

விண்+இன்று - மழைபெய்யாமல்
பொய்ப்பின் - பொய்படுமானால் ஏமாற்றினால்
விரிநீர் - விரிந்திருக்கும்நீர் கடல் கடலால் சூழப்பட்ட
வியன்+உலகத்துள் - அகன்ற உலகத்துள்
உலகத்துள் + நின்று + உடற்றும் - உள்ளே நின்று வருத்தும் பசி
உடற்றும் -வருத்தும்
உழற்சி - துன்பம்

Tuesday, January 12, 2010

940-1 மருந்து

மருந்து (பொருட்பால் - அங்கவியல்)
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும் - 947
பசித்தீயின் அளவின்படியல்லாமல் அதை அறியாமல் மிகுதியாகவுண்டால் அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.

தெளிபொருள் விளக்கம்
தீ+அளவு+இன்றி - பசித்தீயின் அளவின்படியல்லாமல்
தெரியான் - அதை அறியாமல்
பெரிது+உண்ணின் - மிகுதியாகவுண்டால்
நோய்+அளவு+இன்றிப்படும் - நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.

Monday, January 11, 2010

340-1 துறவு

துறவு (அறத்துப்பால் -> துறவறவியல்)
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும் - 346
நான் எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கிவிட்டவன் வானவர்க்கும் மேலானவுலகத்தையடைவான்

தெளிபொருள் விளக்கம்
யான்+எனது - நான் எனது
என்னும்+ செருக்கு+அறுப்பான் - என்கின்ற ஆணவத்தை விலக்கிவிட்டவன்
வானோர்க்கு+உயர்ந்த - வானவர்க்கும் மேலான
உலகம் புகும் - உலகத்தையடைவான் (உலகத்தை+அடைவான்)
செருக்கு - மிகுந்ததற்ப்பெருமை அகந்தை ஆணவம்
செருக்கு - பெருமையென்றும் போருள்பெரும்


திருவள்ளுவர் மிகசிலகுரட்களில் வானோர் தெய்வம் மறுபிறவி இவற்றைப்பற்றி கூறியுள்ளார்

Sunday, January 10, 2010

175~180 வெஃகாமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

179  அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
          திறனறிந் தாங்கே திரு

சரி தவறு என்னும் அறத்தையறிந்து பிறட்பொருளைவிரும்பாத அறிவுடையாரிடம் அவரின் நற்பண்பின்விளைவாக தானாகவே செல்வஞ்சேரும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறன் அறிந்து - சரி தவறு என்னும் அறத்தை அறிந்து
வெஃகா - பிறட்பொருளை விரும்பாத
அறிவுடையார் - அறிவுடையாரை
திறன் அறிந்து - அவரின் நற்பண்பை அறிந்து
ஆங்கே - அதன்விளைவாகவே தானாகவே
திரு சேரும் - செல்வம் சேரும்
--------------------------------------------------------------------------------
அழுக்காறு - பிறரைக்கண்டு பொறாமை
வெஃகுதல் - பிறட்பொருளை தானடையவிரும்புவது
--------------------------------------------------------------------------------
180  இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
           வேண்டாமை என்னுஞ் செருக்கு

விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர்பொருளை கவர்ந்துகொள்ளவிரும்பினால் அழிவுதரும் பிறர்பொருளை விருப்பங்கொள்ளாதிருக்கும்பெருமை வெற்றிதரும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எண்ணாது - விளைவுகளைப்பற்றி நினைக்காமல்
வெஃகின் - பிறர்பொருளை அடையவிரும்பினால்
இறல்+ ஈ னும் - அழிவுதரும்
வேண்டாமை - பிறட்பொருள் வேண்டாமை
என்னும்+செருக்கு - என்னும் பெருமை
விறல்+ஈனும் - வெற்றிதரும்
செருக்கு - பெருமை

Thursday, January 7, 2010

76~80 அன்புடைமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

78   அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
         வற்றன் மரந்தளிர்த் தற்று

மனத்தில் அன்பில்லாதவருடையவாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளிர்பது போன்றது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அன்பகத்தில்லா -அன்பு+அகத்தில் + இல்லா மனத்தில் அன்பில்லாத
வாழ்க்கை - அன்பில்லாதவுயிரின் வாழ்க்கை
வன்பாற்கண் - வல் + பால் + கண் வலிய வன்மையான பாலைவனத்திலே
வற்றல்+மரம் - வற்றியமரம்
தளிர்த்தற்று - தளிர்பது போன்றது

--------------------------------------------------------------------------------

80   அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
          என்புதோல் போர்த்த உடம்பு

அன்பின் வழிமுறையில் இயங்குவதே உயிர்வாழுந்நிலையாகும் அன்பிலாதவர்க்கு எலும்பை தோல் போர்த்திய வெற்றுடம்பேவாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அன்பின் வழியது - அன்பின்வழி நடப்பதென்பதே
உயிர்நிலை - உயிர்வாழ்தல் என்றாகும்
அஃதிலார்க்கு - அன்பிலாதவர்க்கு
என்புதோல் - எலும்பை தோல்
போர்த்த + உடம்பு - போர்த்தியவுடம்பு

Wednesday, January 6, 2010

1020 - 1 குடிசெயல்வகை

கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில் - 1021
உரியகடமையைச்செய்வதில் சோர்வுகாணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப்பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது

தெளிபொருள் விளக்கம்
கருமம் - கடமை செயல்
கருமஞ்செயவொருவன் - கடமையைச்+செய்ய+ஒருவன்(தன் குடியை உயரச்செய்யும் ஒருவன்)
கைதூவே - கை+சொர்வடையமாட்டேன்
என்னும் பெருமையின் - என்னும் பெருமையைவிட
பீடுடைய தில் - பெருமையுடையது வேறொன்றுமில்லை
பீடு - பெருமை
(கருமம் - வடமொழி)

Tuesday, January 5, 2010

1080-1 தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் - அவளின் அழகு தன்னை வருத்துதலைக்கூருவது
தகையணங்குறுத்தல் (காமத்துப்பால் - களவியல்)

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே
நண்ணாரு முட்குமென் பீடு - 1088
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சும் என் வலிமை இவளுடைய ஒளிபொருந்தியநெற்றிக்கு தோற்றழிந்ததே

தெளிபொருள் விளக்கம்
ஞாட்பினுள் - போர்களதினுள்
நண்ணாரும் - எதிர்த்திடாதபகைவரும்
உட்கும் - அஞ்சும்
என்பீடு - என் வலிமை
ஒண்ணுதல் - ஒள் + நுதல் ஒளிபொருந்தியநெற்றி
ஒண்ணுதற்கு + ஓ - ஒளிபொருந்தியநெற்றி(க்கு) ஒன்றுக்கு மட்டுமே
உடைந்ததே

பகைவருமஞ்சுமென்வலிமை - என் வலிமை - ஒரே சொல், பகைவரும் அஞ்சும் என் வலிமை - ஒரே சொல்
நுதல் - நெற்றி
Remember this song from தேவர்மகன்? it comes during the தேர்த்திருவிழா, after the news of Revathi pregnancy...
"மாசறு பொன்னே வருக..திரிபுரம் அதிலேரித்த ஈசனின் பங்கே வருக.."
must be a devotional song from old age....(Abirami Anthaathi??" ) the following lines come in that song...
"கோல விழியும் பிறைநுதலும்..." --> பிறைநுதல் - பிறைபோன்றநெற்றி
வலிமை பீடு - தமிழ். சக்தி சத்து - வடமொழி

Sunday, January 3, 2010

468

தெரிந்துசெயல்வகை (பொருட்பால் - அரசியல்)
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் - 468
உரியவழியில் செய்யப்படாதமுயற்சி பலர் துணையாகனின்று காத்தபோதிலும் குறையாகிவிடும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
ஆறு - வழி
ஆற்றின் - உரியவழியில்
வருத்தம் - முயற்சி
வருந்தாவருத்தம் - (செயலைச்செய்யும்போது) முயலாதமுயற்சி
பலர்நின்று போற்றினும் - பலர்நின்று காத்தபோதிலும்
பொத்துப்படும் - குறைப்படும்
--------------------------------------------------------------------------------
பொத்து - குறை
பொத்தல் - ஓட்டை
"பொத்துகிட்டு ஊத்துதடி வானம் - அத
ஒதுக்கிட்டு நீயு வரவேண்டும் - பாயும்புலி"
-------------------------------------------------------------------------------