Thursday, January 14, 2010

11~15 வான்சிறப்பு (அறத்துப்பால் - பாயிரவியல்)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை - 12

யாருக்கு உணவுப்பொருட்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ அவர்களுக்கே அந்தமழை அருந்தும் உணவாகவுமாகி அரிய தியாகத்தைச்செய்கிறது
--------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

துப்பார்க்கு - உண்பவர்க்கு
துப்பாய - நன்மையாகி (துப்பு+ஆகிய துப்பாக)
துப்பாக்கித்துப்பார்க்கு - துப்பு ஆக்கி (உணவை) உண்டாக்கி உண்பவர்க்கு
துப்பாய - துப்பு+ஆக துப்பாக பயனுள்ளதாக
தூவும் மழை
-------------------------------------------------
எனக்கெட்டியது
உண்பவர்களுக்கு பயன்படுவதை உண்டாக்கி உண்பவர்க்கு (உழவருக்கு) பயனுள்ளதாக பேயும் மழை

என் கருத்து
துப்புகெட்டவன் துப்பில்லதாவன் - பயனில்லாதவன்
துப்பு - பயன்
பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதான (உணவை) பயனுள்ளதாக (உண்டாக்கிதரும்) பயனுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக தூவும் மழை
-------------------------------------------------

விண்யின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி - 13

மழைபெய்யாமல் பொய்படுமானால் கடல்சூழ்ந்த அகன்றவுலகதின் உள்ளேநின்று பசி உயிர்களை வருத்தும்
-------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

விண்+இன்று - மழைபெய்யாமல்
பொய்ப்பின் - பொய்படுமானால் ஏமாற்றினால்
விரிநீர் - விரிந்திருக்கும்நீர் கடல் கடலால் சூழப்பட்ட
வியன்+உலகத்துள் - அகன்ற உலகத்துள்
உலகத்துள் + நின்று + உடற்றும் - உள்ளே நின்று வருத்தும் பசி
உடற்றும் -வருத்தும்
உழற்சி - துன்பம்

No comments:

Post a Comment