Sunday, December 20, 2009

728, 1028

அவையஞ்சாமை (பொருட்பால் -> அமைச்சியல்)

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு


ணன்கு செலச்சொல்லா தார் - 728

அறிவுடையோர் நிறைந்தஅவையில் அவர்கள் மனத்தில்பதியும் அளவுக்கு கருத்துக்களைச்சொல்லயியலாவிடின் என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை




தெளிபொருள் விளக்கம்

பல்லவைகற்றும் - பலநூல்களைக்கற்றிருந்தாலும்

பயமிலரே - பயம் + இலரே நன்மைபயக்காதவரே விளைவிக்காதவரே

நல்லவையுள் - (படித்தோர் நிறைந்த) நல்ல அவையில்

நன்கு செல - நல்லவற்றை செல்லும்படியாக

சொல்லாதார் - சொல்லாதவர்

இங்கு 'பயம்' என்பது 'பயக்கும்' என்றபொருளில் இடைபெற்றுள்ளது 'அச்சம்' என்ற பொருளிலல்ல பயம் - வடமொழி அச்சம் - தமிழ்



குடிசெயல்வகை (பொருட்பால் -> ஒழிபியல்)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும் - 1028

நாட்டைவளம்பெறசெய்பவர் நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார் அவர் சோர்வுற்று தேவையற்றவீண் மானத்தைக்கருதிக்கொண்டிருந்தால் ஆக்கம் ஏற்படாமல் கேடுதலே நடக்கும்



தெளிபொருள் விளக்கம்

குடிசெயல்வகை - குடியைவுருவாக்குதல் நாட்டைவளம்பெறசெய்தல்

குடிசெய்வார்க்கில்லை - குடிசெய்பவர்க்கு+இல்லை

பருவம் - நேரம் (நல்ல நேரம் பார்துதிருக்கமாட்டார் )

மடி - சோம்பல்

மடிசெய்து - சோர்வுற்று

மானங்கருத - தேவையற்ற வீண் மானத்தைக்கருதிக்கொண்டிருந்தால்

கெடும் - ஆக்கம் ஏற்படாமல் கேடுதலே நடக்கும்




No comments:

Post a Comment