Monday, December 28, 2009

1000, 666

பண்புடைமை (பொருட்பால் -> ஒழிபியல்)

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்


கலந்தீமை யாற்றிரிந் தற்று - 1000

பாத்திரதிந்தீமையால் அதில்வூற்றிவைக்கப்படும் பால் கெட்டுவிடுவவதைப்போன்றது பண்பில்லாதவர்கள் பெற்றசெல்வம்


தெளிபொருள் விளக்கம்பண்பிலான் - பண்பில்லாதவன்

பெற்றபெருஞ்செல்வம் - ஈட்டியபெருஞ்செல்வம்

நன்பால் - நல்ல பால்

கலந்தீமையால் - கலன்+தீமையால் - பாத்திரதின்+தீமையால்

திரிந்தற்று - திரிந்துவிடுவதைப்போன்றது




வினைத்திட்பம் (பொருட்பால் -> அமைச்சியல்)

எண்ணிய வெண்ணியாங் கெய்துப எண்ணியார்


திண்ணிய ராகப் பெறின் - 666

ஒன்றையடையயெண்ணுபவர் அதற்குரிய செயலிலுறுதியுடையவராகயிருந்தால் அதை எண்ணியவாறே அடைவார்




தெளிபொருள் விளக்கம்எண்ணிய - எண்ணியதை

எண்ணியாங்கு - எண்ணியவாறு

எய்துப - (எய்துவர்) அடைவர்

எண்ணியார் - (அதையடைய) எண்ணுபவர்

திண்ணியராக - (அந்த செயலைச்செய்யகூடிய) திண்மையுடையவராக

பெறின் - இருந்தால்



No comments:

Post a Comment