Wednesday, March 17, 2010

531~535 பொச்சாவாமை (பொருட்பால் -> அரசியல்)

531  இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
         வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு

மிகுந்தமகிழ்ச்சியினால் ஏற்படுகின்றமறதி எல்லைகடந்த சினத்தைவிட தீமையானதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பொச்சாவாமை - மறவாமை
சிறந்த + உவகை - மிகுந்த அகமகிழுதல்
மகிழ்ச்சியில் + சோர்வு - மகிழ்ச்சியிலிருக்கும்போது ஏற்படுகின்றமறதி
இறந்த - எல்லைகடந்த
வெகுளியின் - சினத்தைவிட (இன் - விட)
தீதே - தீமையானதே
--------------------------------------------------------------------------------
இறவு - எல்லை இறப்பு - முடிவைக்காணுதல்
ஆனந்தம் - வடமொழி உவகை - தமிழ்
--------------------------------------------------------------------------------
532  பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
          நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

எந்நாளும் வறுமையிலிருப்பது ஒருவனின் அறிவை கொன்றுவிடுவதைப்போல ஒருவனின் மறதி அவனின் புகழைக்கொன்றுவிடும்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

அறிவினை - அறிவை அறிவுதனை
நிச்ச நிரப்பு - எந்நாளும் வறுமை
கொன்று + ஆங்கு - கோல்வதைப்போல் ஆங்கே அவ்வண்ணம்
பொச்சாப்பு - மறதி
கொல்லும் புகழை - புகழைக்கொன்றுவிடும்
--------------------------------------------------------------------------------
நிச்ச நிரப்பு - எந்நாளும் பிறரிடங்கையேந்தி வயிற்றை நிரப்புதல் - Daily wages.??
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment