Sunday, January 10, 2010

175~180 வெஃகாமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

179  அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
          திறனறிந் தாங்கே திரு

சரி தவறு என்னும் அறத்தையறிந்து பிறட்பொருளைவிரும்பாத அறிவுடையாரிடம் அவரின் நற்பண்பின்விளைவாக தானாகவே செல்வஞ்சேரும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறன் அறிந்து - சரி தவறு என்னும் அறத்தை அறிந்து
வெஃகா - பிறட்பொருளை விரும்பாத
அறிவுடையார் - அறிவுடையாரை
திறன் அறிந்து - அவரின் நற்பண்பை அறிந்து
ஆங்கே - அதன்விளைவாகவே தானாகவே
திரு சேரும் - செல்வம் சேரும்
--------------------------------------------------------------------------------
அழுக்காறு - பிறரைக்கண்டு பொறாமை
வெஃகுதல் - பிறட்பொருளை தானடையவிரும்புவது
--------------------------------------------------------------------------------
180  இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
           வேண்டாமை என்னுஞ் செருக்கு

விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர்பொருளை கவர்ந்துகொள்ளவிரும்பினால் அழிவுதரும் பிறர்பொருளை விருப்பங்கொள்ளாதிருக்கும்பெருமை வெற்றிதரும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எண்ணாது - விளைவுகளைப்பற்றி நினைக்காமல்
வெஃகின் - பிறர்பொருளை அடையவிரும்பினால்
இறல்+ ஈ னும் - அழிவுதரும்
வேண்டாமை - பிறட்பொருள் வேண்டாமை
என்னும்+செருக்கு - என்னும் பெருமை
விறல்+ஈனும் - வெற்றிதரும்
செருக்கு - பெருமை

No comments:

Post a Comment