Wednesday, March 10, 2010

305~310 வெகுளாமை (அறத்துப்பால் -> துறவறவியல்)

வெகுளாமை - சினங்கொள்ளாமை

308  இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
           புணரின் வெகுளாமை நன்று

சுடர்நெருப்பு நம்மேல் படருவதுபோல் துன்பஞ்செய்திருந்தாலும் அவன் உறவுகொள்ளவரும்போது சினங்கொள்ளாமை நன்று
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இணர் - பலசுடர்களையுடைய
எரி - நெருப்பில்
தோய் அன்ன - மூழ்கடிப்பதைப்போல்
இன்னா செயினும் - துன்பம் செய்திருந்தாலும்
புணர் இன் - சேரவரும்போது
வெகுளாமை - சினங்கொள்ளாமை
நன்று

வெகுளி - சினம்
--------------------------------------------------------------------------------
தோய்த்தல் - நனைத்தல் குளித்தல் ஊறவைத்தல்
தோய் - தயிர் தோய்தல், மாவு தோய்தல்
தோயப்பம் (தோய் அப்பம்) தான் மருவி தோசை ஆகிவிட்டது
--------------------------------------------------------------------------------
309  உள்ளிய வெல்லா முடனெய்தும் உள்ளத்தா
       லுள்ளான் வெகுளி யெனின்

ஒருவன் உள்ளத்தில் சினங்கொள்ளவில்லையென்றால்
அவன் எண்ணியயெள்ளவற்றையும் உடனேயடைவான்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
வெகுளி - சினத்தை
உள்ளத்தால் + உள்ளான் - உள்ளத்தால் நினைக்காதவன்
எனின் - (உள்ளத்தாலுங்நினைக்காதவன்) என்றால்
உள்ளிய + எல்லாம் - எண்ணியதெல்லாம்
உடன் + எய்தும் - உடனேகிடைக்கும்
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment