Thursday, March 11, 2010

511~515 தெரிந்துவினையாடல் (பொருட்பால் -> அரசியல்)

தெரிந்துவினையாடல் -  ஒருவரால் செய்யக்கூடியசெயலை அவரிடங்கொடுத்து ஆளுந்திறன்
--------------------------------------------------------------------------------
514  எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
         வேறாகு மாந்தர் பலர் - 514

எல்லாவகைகளிலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தபின்னும் செயலின் வகைவேறுபாடுகளின்விளைவாக அதைச்செய்யக்கூடிய மக்கள் பலவகைப்படுகின்றனர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
எனைவகையான் - எல்லாவகையும்
தேறியக்கண்ணும் - தேர்ந்தெடுத்தபோதிலும்
வினைவகையான் - செயளின்வகையால்
வேறாகும் - வேறுபாடும்
மாந்தர்பலர் - மக்கள் பலருள்ளனர்
--------------------------------------------------------------------------------
515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
         சிறந்தானென் றேவற்பாற் றன்று

நன்கறிந்து இடையூறுகளைப்பொறுத்து செய்துமுடிப்பவனிடமல்லாமல் மனதிற்குச்சிறந்தவனென்றுபட்டவனிடம் ஒரு வேலையை ஏவக்கூடாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறிந்து - செயலை நன்கு அறிந்து
ஆற்றி - (இடையூறுகளை) பொறுத்து
செய்கின் +பாற்கு - செய்பவனுக்கு
அல்லால் - அல்லாமல்
சிறந்தானென்று - மனதிற்குச்சிறந்தவனென்று
வினைதான் - ஒரு செயல்
ஏவல் பாற்று அன்று- ஏவும் தன்மையை உடையதற்று
--------------------------------------------------------------------------------
நன்கறிந்து இடையூறுகளைப்பொறுத்து செய்துமுடிப்பவனிடமல்லாமல் ஒரு வேலையானது மனதிற்குச்சிறந்தவனென்றுபட்டவனிடம் ஏவுந்தன்மையை உடையதற்று
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment