Tuesday, March 9, 2010

591~595 ஊக்கமுடைமை (பொருட்பால் - அரசியல்)

593  ஆக்க மிழந்தேமென் றல்லாவார் ஊக்க
        மொருவந்தங் கைத்துடை யார்

மனத்தில் ஊக்கத்தை ஒருவகப்படுத்தி உறுதியாகயிருப்பவர் செயலை செல்வத்தை இழந்துவிட்டோமென்று வருந்தமாட்டார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஆக்கம் - செயல் செல்வம்
இழந்தேம் + என்று - இழந்துவிட்டோமென்று அல்லாவார் - அல்லற்படமாட்டார் வருந்தமாட்டார்
ஊக்கம் + ஒருவந்தம் -ஊக்கத்தை மனத்தில் ஒருவகப்படுத்துதல்
கைத்து + உடையார் - தன்னிடமுடையார்
--------------------------------------------------------------------------------
594  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
           வூக்க முடையா னுழை

எந்தச்சூழலிலும்மாறாத ஊக்கத்தையுடையவனிடம் நற்பயன் தானாகவே வழிகேட்டு சென்றடையும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அசைவு இலா - அசைக்கமுடியாத மாறாத நிலையான
ஊக்க உடையான் - ஊக்கத்தை உடையவனிடம்
உழை - அவ்விடம்
ஆக்கம் - ஆக்கப்பொருள் (எதற்காகச்செயல்படுகிறானோ)
அதர்வினாய் - அதுவே வினாவி, தானாகவே வழிகேட்டு
செல்லும் - சென்றடையும்
--------------------------------------------------------------------------------
595  வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
           முள்ளத் தனைய துயர்வு

நீரின் அளவையொட்டியதது மலர்தண்டின் நீட்டம் மனிதரின் உள்ளத்திலுள்ள ஊக்கத்தையொட்டியதது அவரின் உயர்வு
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வெள்ளத்து + அனைய - நீரின் அளவையொட்டி அளவைச்சார்ந்தது
மலர்நீட்டம் - மலர்தண்டின் நீட்டம்
மாந்தர்தம் - மனிதரின்
உள்ளத்து+ அனையது - ஊக்கத்தையொட்டியது
உயர்வு - (ஒருவரின்) உயர்வு
--------------------------------------------------------------------------------
மனம் மன் - வடமொழியாகயிருக்கலாம் - மற்றொரு தமிழ்ச்சொல் உள்ளம்
மனம்போல் மாங்கல்யம் - உள்ளம்போல் உயர்வு
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment