Monday, March 22, 2010

921~925 கள்ளுண்ணாமை (பொருட்பால் -> அங்கவியல்)

922  உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரா
         னெண்ணப் படவேண்டா தார்

கள்ளையருந்தவேண்டாம் நல்லோரால் பாராட்டபடவேண்டாதவர் கள்ளை அருந்தவேண்டுமாயின் அருந்துக
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கள்ளை
உண்ணற்க - அருந்தவேண்டாம்
சான்றோரான் - நன்மதிப்பைப்பெற்றோரால்
எண்ணப்பட - (நினைத்துப்பார்க்க)பாராட்டபட
வேண்டாதார் - வேண்டாதவர்
உணில் + உண்க - அருந்தவேண்டுமாயின் அருந்துக
-------------------------------------------------------------------------------
உண் + அற்க - உண்ணற்க
குறிலை அடுத்துவரும் மெய்யெழுத்தோடு உயிரெழுத்து சேரும்போது அந்தமெய் இரட்டிக்கும்
மின் + அஞ்சல் - மின்னச்சல்
பொன் + ஆரம் - பொன்னாரம்
(நன்னூல் - 205)
பால் + ஆறு - பாலாறு நெடிலை அடுத்து இரடிக்கவில்லை
--------------------------------------------------------------------------------
923  ஈ.ன்றாண் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
          சான்றோர் முகத்துக் களி

யாதுசெய்யினும் மகிழும் தாயின்முன்புகூட கள்ளுண்பது துன்பந்தருவது அதனால் சான்றோர்முன் கள்ளுண்டுக்களிப்பது எவ்வளவு துன்பந்தரக்கூடியசெயலாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஈ.ன்றாள் + முகத்தேயும் - தாயின் முன்புகூட
இன்னாதால் - இன்னாது ஆதலால் - துன்பந்தருவது அதனால்
சான்றோர்முகத்து - சான்றோர்முன்
களி - கள்ளுண்டுக்களிப்பது
என்மற்று - எம்மாத்திரம் எவ்வளவு துன்பந்தரக்கூடியசெயல்
--------------------------------------------------------------------------------
கள் - தமிழ்
மது - வடமொழி
Vodka - Russian
Tequila - Mexican
Feni (Fenny) - Goa
கள் - தமிழ்நாடு
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment