Thursday, March 25, 2010

981~985 சான்றாண்மை (பொருட்பால் -> ஒழிபியல்)

981  கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
          சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

செய்யத்தகுந்தவற்றை அறிந்துச்செயலாற்றி சன்றோராக விளங்கவேண்டுவோர்க்கு நற்குணங்களெல்லாம் அமைந்திருக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கடனறிந்து - செய்யத்தகுந்தவற்றை அறிந்து
சான்றாண்மை - சிறந்தோராக
மேற்கொள்பவர்க்கு - விளங்குவோருக்கு
நல்லவை + எல்லாம் - நற்குணங்கள் எல்லாம்
கடன் + என்ப - அமையகடமைப்பற்றிருக்கிறது எனப்படும்
--------------------------------------------------------------------------------
சான்றோர் சான்றிதழ் நற்சான்று
--------------------------------------------------------------------------------

982  குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
        மெந்நலத் துள்ளதூஉ மன்று
(குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று - 982)

நற்பண்பே சான்றோரின் சிறப்பு அவையல்லாமல் வெறும் உறுப்புகளின் அழகு எவ்வகை சிறப்பிலும் சேர்ந்ததில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குணநலம் - குணத்தின் சிறப்பே, பெருமையே
சான்றோர் நலனே - சான்றோரின் சிறப்பு
பிறநல - அது அல்லாமல் உறுப்புகளின் அழகு
எந்நலத்து - எவ்வகை சிறப்பிலும்
உள்ளதும் அன்று - சேர்ந்தது இல்லை
--------------------------------------------------------------------------------நலம்புனைந்துரைத்தல்’ என்ற அதிகாரத்திற்கு ’அழகின் சிறப்புரைத்தல்’ என்று பொருள். 'நலம்’ என்ற சொல் சிறப்பு, அழகு என்று பொருட்களிலும் வருகிறது.
பிறநலம் - இங்கு பிற என்ற சொல் உடலைக்குறிக்கிறது.
--------------------------------------------------------------------------------

983  அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
            டைந்துசால் பூன்றிய தூண்

அன்புடைமை செய்ததவறுக்கு நாணுதல் அனைவரோடும் ஒத்துவாழ்தல் இறக்கங்காட்டுதல் உண்மைபேசுதல் இவைஐந்தும் சான்றான்மையைத்தாங்கும் தூண்கள்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அன்பு - அன்புடைமை
நாண் - செய்ததவறுக்கு வெட்கப்படுதல்
ஒப்புரவு - அனைவரோடும் ஒத்துவாழ்தல்
கண்ணோட்டம் - இறக்கங்காட்டுதல்
வாய்மை (யோடு) - உண்மைபேசுதல்
ஐந்து - இவைஐந்தும்
சால்பு + ஊன்றிய - சான்றான்மையைத்தாங்கும்
தூண் - தூண்கள்
--------------------------------------------------------------------------------
வாய்மையோடு - வாய்மையோடுச்சேர்த்து ஐந்து
இத்தோட மூணு தபா ஆச்சி
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment