Sunday, May 9, 2010

361~635 அவாவறுத்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)

363  வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈ.ண்டில்லை
          ஆண்டு மஃதொப்ப தில்

அவாயின்மைபோன்ற சிறந்தச்செல்வம் இவ்வுலகிலில்லை அவ்வுலகிலும் அதற்கு இணையானது வேறொன்றுமில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வேண்டாமை - அவாயின்மை
அன்ன - போன்ற
விழுச்செல்வம் - விழுமம் + செல்வம்
விழுமம் - நல்ல சிறந்த
ஈ.ண்டு இல்லை - இங்கில்லை இவ்வுலகிலில்லை
ஆண்டும் - அங்கும் அவ்வுலகிலும்
அஃது + ஒப்பது + இல் - அதற்கு இணையானது இல்லை (அதற்கிணையானது)
--------------------------------------------------------------------------------
ஆசை - வடமொழி அவா - தமிழ்ச்சொல்
அவாவை + அறுத்தல் - அவாஅறுத்தல் - அவாவறுத்தல் ('அ' 'வ'வாக மாறியது
வேண்டாமையை + அன்ன - வேண்டாமைஅன்ன - வேண்டாமையன்ன ('அ' 'ய'வாக மாறியது
--------------------------------------------------------------------------------

364  தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
           வாஅய்மை வேண்ட வரும்

மனத்தூய்மையென்பது ஆசையில்லாமல் இருப்பதே ஆசையில்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

தூஉய்மை - தூய்மை
தூய்மையென்பதவாவின்மை - தூய்மை+ என்பது+ அவா+ இன்மை
மற்றது - அது
வாய்மை வேண்ட வரும் - (அது) மெய்பொருளை விரும்புவதால் வரும்
--------------------------------------------------------------------------------
"மற்றது" என்பது "மற்றவை"யென்று பொருளாகாது.
தூய்மை+ என்பது+ அவாவின்மை இதில் இரண்டாவதாக வரும் "அவாவின்மை"யை குறிப்பதற்காக வரும் சொல். "அது" என்று குறிப்பிட்டிருந்தால் "தூய்மையா" அல்லது "அவாவின்மையா" என்று பொருள் தெளிவாகவிளங்காது.

To put in English - "Ram and Gopi are brothers, the latter is the younger one". Had it been "Ram and Gopi are brothers, he is the younger one", then 'he' refers to whom?

ஆகா "latter"க்கு ஆனா தமிழ்ச்சொல் "மற்றது".
this can be clarified from kural no. 361 too.

No comments:

Post a Comment