Monday, May 10, 2010

711~715 அவையறிதல் (பொருட்பால் -> அமைச்சியல்)

713  அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
           வகையறியார் வல்லதூஉ மில்

எவ்வாறான அவை என்று அறியாதவர் தான்பேசும் சொல்லின் கூறுபாட்டை தானே அறியமாட்டார் மற்றும் அந்தசொல்லும் சிறந்ததாகயிருக்காது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அவையறியார் - எவ்வாறான அவை என்று அறியாதவராக
சொல்லல் - பேசுவதை
மேற்கொள்பவர் -
சொல்லின் - பேசும் சொல்லின்
வகையறியார் - கூறுபாட்டை அறியார்
வல்லதூஉம் இல் - சிறந்ததும் இல்லை
--------------------------------------------------------------------------------
714  ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
          வான்சுதை வண்ணங் கொளல்

அறிவாளிகளுக்குமுன்னால் அறிவுடையவராகவிளங்கவேண்டும் அறிவில்லாதவர்முன்னால் வெண்சுண்ணாம்புப்போல் தம்மையும் அறிவற்றவர்களாய் காட்டிக்கொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஒளியார்முன் - அறிவாளிகளுக்குமுன்னால்
ஒள்ளியர் +ஆதல் - அறிவுடையவராகவிளங்கவேண்டும்
வெளியார்முன் - அறிவிலார்முன்
வான்சுதை - வெண்சுண்ணாம்பு
வண்ணம் + கொளல் - நிறம்பெற்றவேண்டும்
--------------------------------------------------------------------------------
715  நன்றென் றவற்றுள்ளு நன்றே முதுவருண்
          முந்து கிளவாச் செறிவு

தன்னைவிட மிகுந்தவர் இருக்கும் அவையில் முந்திக்கொண்டு பேசாத அடக்கம் நன்றென சொல்லப்படுபவைகளைவிட நல்லதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நன்று+ என்றவற்றுள்ளும் - நன்று என சொல்லப்படுபவைகளைவிட
நன்றே - நல்லதே
முதுவருள் - தன்னைவிட மிகுந்தவர் இருக்கும் அவையில்
முந்து - முந்திக்கொண்டு
கிளவா - சொல்லாத
விழுமம் - அடக்கம்
--------------------------------------------------------------------------------
அவையை + அறிதல் - அவைஅறிதல் - அவையறிதல்
பேசாத அடக்கம் - பேசாதவடக்கம் - பேசாவடக்கம்
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment