Sunday, July 11, 2010

1155~1160 பிரிவாற்றாமை (காமத்துப்பால் -> கற்பியல்)

1160 அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
            பின்னிருந்து வாழ்வார் பலர்

நீ பிரிந்துச்செல்ல விடைக்கொடுக்கமுடியாமல் விடைக்கொடுத்து துன்பத்தைநீக்கி பிரிவைப்பொறுத்துக்கொண்டு அதன்பின்னும் உயிர்வாழும்பெண்கள் பலருண்டு
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அரிது ஆற்றி - செய்யாமுடியாததைச்செய்து (நீ பிரிந்துச்செல்ல விடைக்கொடுத்து)
அல்லல்நோய்நீக்கி - துன்பத்தைநீக்கி
பிரிவு ஆற்றி - பிரிவைப்பொறுத்துக்கொண்டு
பின் இருந்து - அதன்பின்னும் உயிருடனிருந்து
வாழ்வார் பலர் - உயிர்வாழும்பெண்கள் பலருண்டு
--------------------------------------------------------------------------------
ஆற்றி, ஆற்றுதல் - செய்தல், கடைப்பிடித்தால்
அரிது ஆற்றி
அரிது - முடியாதவொன்று
'கஷ்டப்பட்டு' என்னும் வடமொழிச்சொல்லுக்கு அழகான தமிழ்ச்சொல் கூறியுள்ளார்
கடினம் என்பதும் கஷ்டத்தின் தமிழாக்கமே

அல்லல்நோய் - சென்னைத்தமிழ் 'அல்லோல் படுறேன்'

No comments:

Post a Comment