Monday, July 5, 2010

பழைமை (பொருட்பால் -> அங்கவியல்)

802  நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
          குப்பாதல் சான்றோர் கடன்

பழமையானநட்பின் அடையாளம் நண்பர் நம்மீது வைத்திருக்கும் உரிமை. அந்த உரிமையைப்பாராட்டி இனிமையாக ஏற்றுக்கொள்வது பெரியோர்செயல்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நட்பிற்கு - பழமையானநட்பிற்கு
உறுப்பு - உடம்போடு சேர்ந்திருக்கும் உறுப்பைப்போல் நட்போடு சேர்ந்திருப்பது
கெழுதகைமை - நண்பர் நம்மீது வைத்திருக்கும் உரிமை
மற்றதற்கு - அதற்கு (அந்த உரிமை)
உப்பு ஆதல் - இனியவர் ஆதல்
சான்றோர் கடன் - சான்றோரின் கடமை
--------------------------------------------------------------------------------
'அதற்கு' என்பதற்கு 'மற்றதற்கு' என்று வள்ளுவர் சிலயிடங்களில் குறிப்பிட்டுள்ளார்
உப்பு - இனிமை அல்லது ஒத்துப்போதல் என்பதும் பொருந்தும்
உறுப்பு - சேர்ந்திருப்பது உறுப்பினர்
--------------------------------------------------------------------------------
802  பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
          செய்தாங்கு அமையாக் கடை

பழகியநண்பர்கள் உரிமையோடுசெய்த காரியங்களை தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால் அதுவரை பழகியநட்பு பயனற்றுப்போகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எவன் செய்யுங் - செய்யும்
கெழுதகைமை - உரிமையினால் செய்தவற்றிற்கு
செய்தாங்கு - செய்த ஆங்கு (அங்கனம்) - செய்தவாறு
கடை - கடமை, பொறுப்பு
அமையாக்கடை - உடன்படாராயின், பொறுப்பேற்க்காவிட்டால்

No comments:

Post a Comment